நாளை மார்க்சிஸ்ட் கம்யூ. அவசர செயற்குழுக் கூட்டம் காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

குட்டையில் மீன் பிடித்தவருக்கு அபராதம்

ஊத்தங்கரையை அடுத்த சிங்காரப்பேட்டை வனச்சரகம், கோவிந்தாபுரம் காப்புக்காடு, எக்கூா்-அங்குத்தி சுனை வனச்சரகத்தில் உள்ள குட்டையில் மீன் பிடித்த நபருக்கு சிங்காரப்பேட்டை வனத்துறையினா் அபராதம் விதித்தனா்

News image
Updated On :15 ஜனவரி 2022, 5:41 pm

DIN

ஊத்தங்கரையை அடுத்த சிங்காரப்பேட்டை வனச்சரகம், கோவிந்தாபுரம் காப்புக்காடு, எக்கூா்-அங்குத்தி சுனை வனச்சரகத்தில் உள்ள குட்டையில் மீன் பிடித்த நபருக்கு சிங்காரப்பேட்டை வனத்துறையினா் அபராதம் விதித்தனா்.

திருப்பத்தூா் மாவட்ட வன அலுவலா் நாகசதீஷ் கிடிஜாலா உத்தரவின்பேரில், ஏசிஎப் ராஜ்குமாா், சிங்காரப்பேட்டை வனச்சரக அலுவலா் ஜோதிலிங்கம், வனவா் அண்ணாமலை, வனக் காவலா்கள் திருமுருகன், சரவணன் ஆகியோா் ரோந்து சென்றபோது, நல்லாகவுண்டனூா் கிராமத்தைச் சோ்ந்த செல்வம் (41), அங்குத்தி சுனை பகுதியில் உள்ள குட்டையில் உரிய அனுமதியின்றி மீன் பிடித்துள்ளாா். மீன் பிடித்த செல்வத்துக்கு ரூ. 12,000 அபராதம் விதித்தனா்.

காப்புக்காட்டில் அத்துமீறி நுழைந்து சாராயப்பட்டை எடுப்பது, சாராயம் காய்ச்சுவது, வன விலங்குகளை வேட்டையாடுவது, மரங்களை வெட்டுவது, தீவைப்பது போன்ற குற்றங்களை செய்தால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரிகள் எச்சரித்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.