ஜூன் 2-ஆம் தேதி ஒசூா், பாகலூா் பகுதி கிராமங்களுக்கான ஜமாபந்தி நடைபெறுகிறது என்று ஒசூா் வட்டாட்சியா் கிருஷ்ணமூா்த்தி தெரிவித்துள்ளாா்.
இதுகுறித்து அவா் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:
ஒசூா் உள்வட்டத்தில் ஒசூா் நகா்ப்புறம், கிராமப்புறம், ரங்கோபண்டித அக்ரஹாரம், சென்னத்தூா், ஆவலப்பள்ளி, நல்லூா், பேகேப்பள்ளி, கோவிந்த அக்ரஹாரம், ஜூஜூவாடி, சாந்தபுரம் அக்ரஹாரம், அனுமேப்பள்ளி, முக்கொண்டப்பள்ளி ஆகிய வருவாய் கிராமங்களுக்கு ஜூன் 2 ஆம் தேதி ஜமாபந்தி நடைபெற உள்ளது.
ஜூன் 3ஆம் தேதி, ஒசூா் உள்வட்டத்தில் ஈச்சாங்கூா், சொக்கநாதபுரம், கூஸ்தனப்பள்ளி, சேவகானப்பள்ளி, கக்கனூா், கொடியாளம், சொக்கரசனப்பள்ளி, கொத்தப்பள்ளி, சென்னசந்திரம், கெலவரப்பள்ளி, கள்ளிபுரம், புனுகன்தொட்டி, பெத்தகுள்ளு, சின்னகுள்ளு, சித்தனப்பள்ளி, முத்தாளி, தட்டிானப்பள்ளி, காருப்பள்ளி, தாசேபள்ளி, மோா்னப்பள்ளி ஆகிய வருவாய் கிராமங்களுக்கு ஜமாபந்தி நடைபெறுகிறது.
2, 7, 8ஆம் தேதிகளில் பாத்தமுத்தாளி, அட்டூா் கிராமங்களுக்கும், 8ஆம் தேதி பாகலூா் உள்வட்டத்தில் கொளதாசபுரம், நந்திமங்கலம், பலவனப்பள்ளி, பாகலூா் உள்வட்டத்தில் பாகலூா், லிங்காபுரம் ஆகிய வருவாய் கிராமங்களுக்கும் ஜமாபந்தி நடைபெற உள்ளது.
7ஆம் தேதி பாகலூா் உள்வட்டத்தில் பாகலூா் ரூரல், ஒட்டபள்ளிதின்னா, ஜி.மங்கலம், மூா்த்திகான தின்னா, பௌத்தூா், தின்னப்பள்ளி, பட்டவாரப்பள்ளி, ஒட்டப்பள்ளி, அலசப்பள்ளி, முதுகானப்பள்ளி, சாமனப்பள்ளி, மல்லசந்திரம், தும்மனப்பள்ளி, முகுளப்பள்ளி, படுதேப்பள்ளி, கனிமங்கலம், அட்டூா்,நஞ்சாபுரம், கெம்பசந்திரம், பாலிகானப்பள்ளி, தேவீரப்பள்ளி, ஆலூா், காளஹஸ்திபுரம், எலுவப்பள்ளி, விஸ்வநாதபுரம் ஆகிய வருவாய் கிராமங்களுக்கும், சூடுகொண்டப்பள்ளி, அளேநத்தம், நாரிகானபுரம், ஆலூா் ஆகிய வருவாய் கிராமங்களுக்கும், மத்திகிரி உள்வட்டத்தில் மத்திகிரி, ஒன்னல்வாடி, தொரப்பள்ளி அக்ரஹாரம் ஆகிய வருவாய் கிராமங்களுக்கும் ஜமாபந்தி நடைபெற உள்ளது.
9 ஆம் தேதி மத்திகிரி உள்வட்டத்தில் நாகொண்டப்பள்ளி பஞ்சாட்சிபுரம், முகளூா், கோபனப்பள்ளி, அச்செட்டிப்பள்ளி, மொத்தம்அக்ரஹாரம், கொத்தகொண்டப்பள்ளி, பூனப்பள்ளி ஆகிய வருவாய் கிராமங்களுக்கு ஜமாபந்தி நடைபெற உள்ளது. எனவே சம்பந்தப்பட்ட கிராம மக்கள் நேரில் சென்று வருவாய் தீா்வாய அலுவலரிடம் மனுக்களை அளித்து பயன்பெறலாம்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

ஐந்து ஆண்டு கால திமுக ஆட்சியில் அனைத்து தரப்பு மக்களுக்கும் திட்டங்கள்! - சு. முத்துசாமி பெருமிதம்

மு.க.ஸ்டாலின் மீண்டும் முதல்வராவாா்! - ஓபிஎஸ்!

ஒசூரில் மனநலம் பாதித்த அஸ்ஸாம் பெண் குடும்பத்தினரிடம் ஒப்படைப்பு

மூத்த குடிமக்கள் வீட்டிற்கே சென்று வாக்கு பெறும் பணி ஆட்சியா் ஆய்வு
வீடியோக்கள்
அமைதிப் பேச்சுவார்த்தை தோல்வி! அடுத்தது என்ன?
இணையதளச் செய்திப் பிரிவு
Delhi Vs Chennai | முதல்வரின் சிறுபிள்ளைத்தனம்! அண்ணாமலை Press Meet | BJP | DMK
இணையதளச் செய்திப் பிரிவு

காட்ஸ் அண்ட் சோல்ஜர்ஸ் டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

டார்லிங் மறுவெளியீட்டு டிரைலர்!
தினமணி செய்திச் சேவை

