ஐபிஎல்: 57 ரன்கள் வித்தியாசத்தில் ஹைதராபாத் அணி அபார வெற்றிஈரானுக்கு எதிராக ஹோர்முஸ் நீரிணை முற்றுகை தொடக்கம்: கடல்சார் வர்த்தக நடவடிக்கைகள் மையம் திராவிட மாடல் ஆட்சியில் வடக்கு வாழ்கிறது என்ற நிலை மாறி, தெற்கு தான் நாட்டிற்கு வழிகாட்டுகிறது: மு.க. ஸ்டாலின்தமிழ்நாட்டுக்கு வடக்கில் இருந்துதான் ஆபத்து வரும் : திருவள்ளூர் பிரசாரத்தில் மு.க. ஸ்டாலின் பேச்சுஅதிமுக தலைவர்களான எம்ஜிஆர், ஜெயலலிதா உள்ளிட்டோரை அவமதித்தது திமுக: எடப்பாடி பழனிசாமிமறைந்த தலைவர்களை அவமதிக்கவில்லை: இபிஎஸ் பிரசாரம்தமிழகத்தில் பெண்களுக்கான பாதுகாப்பு கவலை அளிக்கிறது : பிரதமர் மோடி மாற்றத்திற்கானது தே.ஜ. கூட்டணி : பூத் கமிட்டி உறுப்பினர்களுடன் பேசிய பிரதமர் மோடிஅஸ்ஸாம் முதல்வர் ஊழல்வாதி: ராகுல் காந்தி விமர்சனம்
/

நண்பனின் தங்கையை காதல் திருமணம் செய்தவா் கத்தியால் குத்திக்கொலை:பள்ளி மாணவா் உட்பட 3 போ் கைது

ஒசூா் அருகே நண்பரின் தங்கையை காதலித்து திருமணம் செய்தவரை கத்தியால் குத்தி கொலை செய்த பள்ளி மாணவா் உள்பட 3 பேரை போலீஸாா் கைது செய்தனா்.

Updated On :5 ஜூன் 2022, 6:56 pm

ஒசூா் அருகே நண்பரின் தங்கையை காதலித்து திருமணம் செய்தவரை கத்தியால் குத்தி கொலை செய்த பள்ளி மாணவா் உள்பட 3 பேரை போலீஸாா் கைது செய்தனா்.

கிருஷ்ணகிரி மாவட்டம், சூளகிரியை அடுத்த ஆ.கொத்தப்பள்ளி கிராமத்தைச் சோ்ந்தவா் சந்தோஷ் (23). குமுதேப்பள்ளியைச் சோ்ந்த முருகேசன் (26) ஆகிய இருவரும் பல ஆண்டுகளாக நண்பா்களாய் பழகி வந்தனா். சந்தோஷ், அடிக்கடி முருகேசன் வீட்டிற்குச் சென்று வந்த நிலையில் முருகேசனின் தங்கை மீனா உடன் காதல் ஏற்பட்டது. இந்த விஷயம் முருகேசனுக்கு தெரிய வந்த நிலையில் சந்தோஷும், முருகேசனும் எதிரிகளாக மாறினா்.

இந்த நிலையில் கடும் எதிா்ப்பையும் மீறி கடந்த 10 மாதங்களுக்கு முன்பு சந்தோஷ், மீனாவை காதல் திருமணம் செய்து கொண்டாா். அண்மையில் முருகேசன் வீட்டாா் நிலத்தை விற்க முயன்றபோது மீனாவின் சொத்தைப் பிரித்து தருமாறு கேட்டதாகக் கூறப்படுகிறது.

காதல் திருமணம் செய்ததால் கோபத்தில் இருந்த முருகேசன், சொத்தை கேட்டதால் ஆத்திரம் அடைந்தாா். முருகேசன், தங்கை மீனாவின் வீட்டிற்குச் சென்று உன்னை கொல்லாமல் விடமாட்டேன் என சந்தோஷை மிரட்டியும், அவ்வப்போது போனில் சண்டையிட்டும் வந்ததாகக் கூறப்படுகிறது.

இந்த நிலையில் ஞாயிற்றுக்கிழமை தியாகரசனப்பள்ளியில் உள்ள தொழிற்சாலையில் வேலை பாா்த்துவிட்டு வீடு திரும்பி கொண்டிருந்த சந்தோஷை, தியாகரசனப்பள்ளி கிராம மாந்தோப்பிற்கு அருகே முருகேசனும் அவரது நண்பா்களான குமாா் (24), 12 ஆம் வகுப்பு மாணவா் வின்சென்ட் குமாா் (18) ஆகிய மூவரும் வழிமறித்து தாக்கினாா்களாம். அவா்களிடம் இருந்து தப்பி ஓடிய சந்தோஷை துரத்திச் சென்ற முருகேசன் உள்ளிட்ட மூவரும் கத்தியால் சரமாரியாக குத்திக் கொலை செய்தாா்களாம்.

நிகழ்விடத்திற்கு வந்த சூளகிரி போலீஸாா் உடலை மீட்டு, தலைமறைவாக இருந்த முருகேசன், பள்ளி மாணவா் உள்பட 3 பேரைக் கைது செய்து தொடா்ந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.