காவேரிப்பட்டணம் அருகே மோட்டார் சைக்கிள் மீது லாரி மோதல்: 2 பேர் பலி
திருப்பத்தூர் மாவட்டம், திருப்பத்தூர் ஹவுசிங் போர்டு பகுதியைச் சேர்ந்த மதலைமுத்துவின் மகன் செந்தில்குமார் (48).


கிருஷ்ணகிரி: திருப்பத்தூர் மாவட்டம், திருப்பத்தூர் ஹவுசிங் போர்டு பகுதியைச் சேர்ந்த மதலைமுத்துவின் மகன் செந்தில்குமார் (48). கிருஷ்ணகிரி மாவட்டம், மகாராஜடையை அடுத்த எம்.சி.பள்ளியைச் சேர்ந்த வீரப்பனின் மகன் ராஜசேகர்(43). இவர்கள் இருவரும் ஒரே மோட்டார் சைக்கிளில் காவேரிப்பட்டிணத்தில் உள்ள தனியார் தொழிற்சாலைக்கு மோட்டார் சைக்கிளில் புதன்கிழமை சென்றனர்.
கிருஷ்ணகிரி - தருமபுரி தேசிய நெடுஞ்சாலையில் திம்மாபுரம் ஏரி அருகே சென்று கொண்டிருந்தபோது, அந்த வழியே சென்ற டேங்கர் லாரி, மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில், இருவரும் தலை நசுங்கி பலியாகினர். தகவல் அறிந்த காவல்துறையினர், நிகழ்விடத்துக்கு விரைந்து சென்று, சடலங்களை மீட்டு காவேரிப்பட்டணம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர். காவேரிப்பட்டணம் காவல்துறையினர், விபத்து குறித்து விசாரனை செய்து வருகின்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...