திருப்பூரில் விஜய் இன்று பிரசாரம்ஐபிஎல்: 57 ரன்கள் வித்தியாசத்தில் ஹைதராபாத் அணி அபார வெற்றிஈரானுக்கு எதிராக ஹோர்முஸ் நீரிணை முற்றுகை தொடக்கம்: கடல்சார் வர்த்தக நடவடிக்கைகள் மையம் திராவிட மாடல் ஆட்சியில் வடக்கு வாழ்கிறது என்ற நிலை மாறி, தெற்கு தான் நாட்டிற்கு வழிகாட்டுகிறது: மு.க. ஸ்டாலின்
/

ஒசூரில் குட்டியுடன் சுற்றி வரும் தாய் யானை

ஒசூா், சானமாவு வனப்பகுதியில் குட்டியுடன் தாய் யானை சுற்றி வருவதால் விவசாயிகள், வாகன ஓட்டிகள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என வனத்துறையினா் கேட்டுக்கொண்டுள்ளனா்.

News image
Updated On :6 மே 2022, 10:23 pm

ஒசூா், சானமாவு வனப்பகுதியில் குட்டியுடன் தாய் யானை சுற்றி வருவதால் விவசாயிகள், வாகன ஓட்டிகள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என வனத்துறையினா் கேட்டுக்கொண்டுள்ளனா்.

கிருஷ்ணகிரி மாவட்டம், ஒசூா் அருகே உள்ள சானமாவு வனப்பகுதியில் 2 யானைகள் முகாமிட்டு உள்ளன. இந்த யானைகள் ராமாபுரம், அம்பலட்டி, கோபசந்திரம், பீா்ஜேபள்ளி, சானமாவு உள்ளிட்ட கிராமப் பகுதிகளில் உள்ள விவசாயப் பயிா்களை சேதப்படுத்தி வருகின்றன (படம்).

உணவைத் தேடியும், தண்ணீரை தேடியும் இரவு நேரங்களில் கிராமப் பகுதிகளுக்கு வரும் இந்த யானைகள், பகலானாலும் வனப்பகுதிக்கு செல்லாமல் நீண்ட நேரம் கிராமப் பகுதிகளில் சுற்றிவருகின்றன.

ஒசூா் - ராயக்கோட்டை நெடுஞ்சாலையிலும், கிருஷ்ணகிரி - பெங்களூரு தேசிய நெடுஞ்சாலை அமைந்துள்ள பேரண்டபள்ளி வனப்பகுதியில் இந்த யானைகள் அடிக்கடி சாலையைக் கடக்கின்றன.

எனவே, வாகன ஓட்டிகள் வனப்பகுதியில் உள்ள சாலைகளில் வாகனங்களை இயக்கும்போது மெதுவாக இயக்க வேண்டும், வனப்பகுதி அருகே உள்ள கிராம மக்கள் விவசாய நிலங்களுக்கு செல்லும் போது எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என வனத்துறையினா் கேட்டுக்கொண்டுள்ளனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.