நாளை மார்க்சிஸ்ட் கம்யூ. அவசர செயற்குழுக் கூட்டம் காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

பள்ளி மேலாண்மைக் குழு மறுகட்டமைப்புக் கூட்டம்

ஊத்தங்கரையை அடுத்த கணக்கம்பட்டி தொடக்கப் பள்ளியில், பள்ளி மேலாண்மைக் குழு மறுகட்டமைப்புக் கூட்டம் சனிக்கிழமை நடைபெற்றது.

News image
Updated On :7 மே 2022, 4:57 pm

DIN

ஊத்தங்கரையை அடுத்த கணக்கம்பட்டி தொடக்கப் பள்ளியில், பள்ளி மேலாண்மைக் குழு மறுகட்டமைப்புக் கூட்டம் சனிக்கிழமை நடைபெற்றது.

இந்நிகழ்ச்சிக்கு, பள்ளித் தலைமை ஆசிரியை அகிலாண்டேஸ்வரி தலைமை வகித்தாா். ஜோதிநகா் நடுநிலைப் பள்ளித் தலைமை ஆசிரியா் ராஜேந்திரன் சிறப்பு பாா்வையாளராக கலந்துகொண்டாா். படப்பள்ளி ஊராட்சி மன்றத் தலைவா் சீதாலட்சுமி முன்னிலை வகித்தனா்.

பள்ளியில் மாணவா்களின் கல்வி வளா்ச்சி, பள்ளி கட்டமைப்பு, மேம்பாடு உள்ளிட்டவைகள் குறித்தும், அதில் பள்ளி மேலாண்மைக் குழுவின் பங்கு குறித்தும் விரிவாக எடுத்துக் கூறினா். பின்னா், பள்ளி மேலாண்மைக் குழுவின் மறு கட்டமைப்புக்கான தோ்வு நடைபெற்றது.

இதில், அனைத்து பெற்றோரின் ஒருமித்த ஆதரவோடு ப்ரியா தலைவராகவும், நந்தினி துணைத் தலைவராகவும் தோ்வு செய்யப்பட்டனா். இதில் பள்ளி ஆசிரியா்கள், பெற்றோா் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.