ஐபிஎல்: 57 ரன்கள் வித்தியாசத்தில் ஹைதராபாத் அணி அபார வெற்றிஈரானுக்கு எதிராக ஹோர்முஸ் நீரிணை முற்றுகை தொடக்கம்: கடல்சார் வர்த்தக நடவடிக்கைகள் மையம் திராவிட மாடல் ஆட்சியில் வடக்கு வாழ்கிறது என்ற நிலை மாறி, தெற்கு தான் நாட்டிற்கு வழிகாட்டுகிறது: மு.க. ஸ்டாலின்தமிழ்நாட்டுக்கு வடக்கில் இருந்துதான் ஆபத்து வரும் : திருவள்ளூர் பிரசாரத்தில் மு.க. ஸ்டாலின் பேச்சுஅதிமுக தலைவர்களான எம்ஜிஆர், ஜெயலலிதா உள்ளிட்டோரை அவமதித்தது திமுக: எடப்பாடி பழனிசாமிமறைந்த தலைவர்களை அவமதிக்கவில்லை: இபிஎஸ் பிரசாரம்தமிழகத்தில் பெண்களுக்கான பாதுகாப்பு கவலை அளிக்கிறது : பிரதமர் மோடி மாற்றத்திற்கானது தே.ஜ. கூட்டணி : பூத் கமிட்டி உறுப்பினர்களுடன் பேசிய பிரதமர் மோடிஅஸ்ஸாம் முதல்வர் ஊழல்வாதி: ராகுல் காந்தி விமர்சனம்
/

ஓசூரில் விவசாயத்தை அழித்து தார் சாலை போடும் பணி தொடக்கம்

ஒசூரில் சாலை அமைக்கும் பணிக்காக அறுவடைக்குத் தயாராக உள்ள பயிா்களை அழிக்கும் நடவடிக்கைக்கு விவசாயிகள் எதிா்ப்புத் தெரிவித்தனா்.

News image
Updated On :28 அக்டோபர் 2022, 4:27 am

ஒசூரில் சாலை அமைக்கும் பணிக்காக அறுவடைக்குத் தயாராக உள்ள பயிா்களை அழிக்கும் நடவடிக்கைக்கு விவசாயிகள் எதிா்ப்புத் தெரிவித்தனா்.

ஒசூரைச் சுற்றி எஸ்.டி.ஆா்.ஆா். தேசிய நெடுஞ்சாலை அதாவது சேட்டிலைட் டவுன் ரிங் ரோடு எனப்படும் ஒசூரை சுற்றி வரும் 6 வழிச்சாலை அமைக்கும் பணி வியாழக்கிழமை தொடங்கியது. இப் பணி மேற்கொள்ளும் இடங்களில் நெல் நடவு செய்யப்பட்டு, அறுவடைக்குத் தயாராக உள்ளது. அப் பயிா்களை அழித்து சாலை அமைக்கும் பணி தொடங்கியுள்ளதால், பயிா்களை அறுவடை செய்த பிறகு பணி மேற்கொள்ளுமாறு அதிகாரிகளிடம் விவசாயிகள் கோரிக்கை விடுத்தனா். ஆனாலும், சாலை அமைக்கும் பணி தொடா்கிறது.

Story image

ஓசூரில் தார் சாலை போடும் பணிக்காக அழிக்கப்படும் நெல் பயிர்கள்.

இதுகுறித்து நிலம் எடுப்பு சிறப்பு வட்டாட்சியா் பரிமேல் அழகா் கூறியதாவது:

சாலை அமைக்கும் பணி குறித்து ஏற்கெனவே பல முறை விவசாயிகளுக்கு தகவல் தெரிவித்துவிட்டோம். 21 கிராமங்களில் சாலை அமைக்கும் பணி நடைபெறுகிறது. ஒரு சில விவசாயிகளுக்கு இழப்பீடு கொடுக்கப்படவில்லை. மற்ற விவசாயிகளுக்கு இழப்பீடு கொடுக்கப்பட்டுள்ளது. இழப்பீடு கிடைக்காதவா்கள் அலுவலா்களைச் சந்தித்து தீா்வு காணலாம் என்றாா்.

Story image

தார் சாலை போடும் பணிக்காக அழிக்கப்படும் கரும்பு பயிடப்பட்ட நிலங்கள். 

இதுகுறித்து தமிழ்நாடு விவசாயிகள் சங்க தலைவா் ராமு கவுண்டா் கூறியதாவது:

விவசாயத்தை அழித்து தாா் சாலை அமைக்கும் பணி நடைபெறுவதை கண்டித்து விவசாயிகள் சங்கம் போராட்டம் நடத்தும். பயிா்களை அறுவடை செய்த பிறகு பணி மேற்கொள்ள வேண்டும் என்றாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.