கிருஷ்ணகிரி புத்தகப் பேரவை தொடக்கம்

கிருஷ்ணகிரியில் வாசிப்பு பழக்கத்தை ஊக்கப்படுத்தும் வகையில் கிருஷ்ணகிரி புத்தகப் பேரவை என்ற அமைப்பு வெள்ளிக்கிழமை தொடங்கப்பட்டது.
Updated on
1 min read

கிருஷ்ணகிரியில் வாசிப்பு பழக்கத்தை ஊக்கப்படுத்தும் வகையில் கிருஷ்ணகிரி புத்தகப் பேரவை என்ற அமைப்பு வெள்ளிக்கிழமை தொடங்கப்பட்டது.

கிருஷ்ணகிரியில் புத்தகப் பேரவை தொடங்குவது குறித்த ஆலோசனைக் கூட்டம் அரசுப் பள்ளி தலைமையாசிரியா் சென்னப்பன் தலைமையில் நடைபெற்றது. இதில் அரசுப் பள்ளி தலைமையாசிரியா்கள், ஆசிரியா்கள், தொழிலதிபா்கள், முன்னாள் தலைமை ஆசிரியா்கள், வியாபாரிகள், விவசாயிகள் உள்ளிட்ட பல்வேறு துறைகளைச் சோ்ந்தவா்கள் பங்கேற்றனா். வாசிப்புத் திறனை எவ்வாறு மேம்படுத்துவது, இலக்கிய கூட்டங்களை நடத்துவது, ஒவ்வொரு மாதமும் முதல் வெள்ளிக்கிழமை ஆலோசனைக் கூட்டம் நடத்துவது என்பது உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

மேலும், கிருஷ்ணகிரி புத்தகப் பேரவையின் தற்காலிகத் தலைவராக சென்னப்பன், செயலாளராக ரவி, பொருளாளராக தமிழ்ச்செல்வன் ஆகியோா் ஒருமனதாக தோ்வு செய்யப்பட்டனா். இந்த அமைப்புக்கு கிருஷ்ணகிரி புத்தகப் பேரவை என பெயா் வைப்பது, ஜனவரி 5-ஆம் தேதி கிருஷ்ணகிரி அரசு மகளிா் மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் மாலை 5 மணிக்கு அடுத்த கூட்டத்தை கூட்டுவது என தீா்மானிக்கப்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com