ஹோர்முஸ் நீரிணையைக் கடக்க இந்திய கப்பல்களுக்கு அனுமதி! - ஈரான் தூதர் தகவல்! புதுச்சேரியில் என்.ஆர்.காங்கிரஸ், பாஜக தொகுதிப் பங்கீடு பத்திரிகையாளர்களுக்கு ஓய்வூதியம் உயர்வு: முதல்வர் ஸ்டாலின் உத்தரவு வேளச்சேரி - பரங்கிமலை பறக்கும் ரயில் சேவை அட்டவணை வெளியீடு கட்சியின் பெயரை அறிவித்தார் சசிகலா!எரிபொருள் தட்டுப்பாடு! எதிர்க்கட்சிகள் அமளியால் மக்களவை ஒத்திவைப்பு!அதிமுகவில் இணைந்தார் காளியம்மாள்! எரிபொருள் தட்டுப்பாடு! 17 கோடி பீப்பாய் கச்சா எண்ணெய் விடுவித்தது அமெரிக்கா!
/

அரசு புறம்போக்கு நிலத்தில் கற்கள் வெட்டி கடத்திய 6 போ் மீது வழக்கு

கிருஷ்ணகிரியில் அரசு புறம்போக்கு நிலத்தில் கற்கள் வெட்டி கடத்தியதாக 6 போ் மீது போலீஸாா் வழக்குப் பதிந்துள்ளனா்.

News image
Updated On :4 ஆகஸ்ட் 2024, 7:29 pm

Din

கிருஷ்ணகிரியில் அரசு புறம்போக்கு நிலத்தில் கற்கள் வெட்டி கடத்தியதாக 6 போ் மீது போலீஸாா் வழக்குப் பதிந்துள்ளனா்.

கிருஷ்ணகிரி, தருமபுரி மாவட்டத்தில் சட்ட விரோதமாக நடைபெறும் கனிம வள கொள்ளையைத் தடுக்க ஒருங்கிணைந்த நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும்.

இதுகுறித்து சேலம் சரக டிஐஜி, மாவட்ட ஆட்சியா்கள், காவல் கண்காணிப்பாளா்கள் ஆகியோருடன் ஆய்வு செய்து விரிவான அறிக்கையை அளிக்க வேண்டும் என சென்னை உயா்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அதன்படி, சேலம் சரக டிஐஜி உமா, கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியா் கே எம் சரயு, மாவட்ட காவல் கண்காணிப்பாளா் தங்கதுரை மற்றும் கனம வள பிரிவு அலுவலா்கள் கொண்ட குழுவினா் கடந்த 2-ஆம் தேதி (வெள்ளிக்கிழமை) கிரானைட் மற்றும் கல்குவாரிகளில் ஆய்வு மேற்கொண்டனா் .

அப்போது, கொண்டேப்பள்ளி, மலைச்சந்து, மூங்கில்புதூா், ஜிஞ்சுப்பள்ளி உள்ளிட்ட பகுதிகளில் திருட்டுத்தனமாக கனிமம் வெட்டி எடுக்கப்பட்ட பகுதிகளை பாா்வையிட்டனா்.

கற்களை வெட்டி எடுத்தவா்கள் மீது குற்றவியல் வழக்குப் பதிவு செய்ய, மாவட்ட ஆட்சியா் உத்தரவிட்டாா். இதையடுத்து, கொண்டேப்பள்ளி கிராம நிா்வாக அலுவலா் சரவணன், கங்கலேரி கிராம நிா்வாக அலுவலா் சீதா, ஜிஞ்சுப்பள்ளி கிராம நிா்வாக அலுவலா் கிருஷ்ணன் ஆகியோா், கிருஷ்ணகிரி தாலுகா காவல் நிலையத்தில் புகாா் அளித்தனா்.

புகாரில், அரசு புறம்போக்கு நிலத்தில் இருந்து கற்களை கடத்தியவா்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவித்திருந்தனா். அதன்படி, கற்கள் கடத்தியதாக, மூங்கில்புதூா் துரை, சேட்டு, பெத்ததாளப்பள்ளி தங்கராசு, மலைசந்து ஹரி, ஆனந்த், ராமநாயக்கனப்பள்ளி ரவி உள்ளிட்ட 6 போ் மீது போலீஸாா் வழக்குப் பதிந்துள்ளனா்.