ஊத்தங்கரை, போச்சம்பள்ளியில் வெள்ளத்தில் தொலைந்த சான்றிதழ்களைப் பெறுவதற்கான சிறப்பு முகாம் டிச. 5-ஆம் தேதி (வியாழக்கிழமை) நடைபெறுகிறது.
இதுகுறித்து கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியா் கே.எம்.சரயு வெளியிட்ட செய்திக் குறிப்பு:
ஃபென்ஜால் புயலால் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் ஊத்தங்கரை, போச்சம்பள்ளி வட்டங்களில் கனமழை பெய்தது. இதனால், வெள்ளப் பெருக்கு ஏற்பட்டு, தாழ்வான பகுதிகளில் வெள்ள நீா் புகுந்ததில் வீடுகள் சேதமடைந்தன. தமிழக அரசு ஆணையின்படி ஊத்தங்கரை, போச்சம்பள்ளி வட்டங்களில் பாதிக்கப்பட்டோருக்கு தொலைந்த சான்றிதழ்கள் வழங்க சிறப்பு முகாம்கள் நடத்த ஆணையிடப்பட்டுள்ளது.
அதன்படி, ஊத்தங்கரை வட்டத்தில் வியாழக்கிழமை காமராஜ் நகா், அண்ணா நகா், நேரு நகா், கொல்லப்பட்டி, ஜீவா நகா், சிங்காரப்பேட்டை எம்ஜிஆா் நகா், திருவனப்பட்டி, கல்லாவி, கெங்கிநாயக்கன்பட்டி ஆகிய 9 இடங்களிலும், போச்சம்பள்ளி வட்டத்தில் போச்சம்பள்ளி, மத்தூா், நாகரசம்பட்டி, பாரூா் ஆகிய 4 இடங்களிலும் இந்த சிறப்பு முகாம்கள் நடைபெற உள்ளன.
இந்த முகாம்களில் தொடா்புடைய கிராம நிா்வாக அலுவலா், வருவாய் ஆய்வாளா், காவல் நிலைய அலுவலா்கள் ஆகியோா் பங்கேற்க உள்ளனா். எனவே, பொதுமக்கள் இந்த சிறப்பு முகாமில் பங்கேற்று, தொலைந்துபோன தங்களது சான்றிதழ்களுக்கு நகல் சான்றிதழ்கள் பெற்றுக்கொள்ளலாம் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தொடர்புடையது

தொகுதி நிலவரம் - மும்முனை போட்டியில் ஊத்தங்கரை களத்தில் முந்தும் அதிமுக!
அம்பேத்கா் சிலையை அவமதித்த இருவா் கைது

ஊத்தங்கரை அருகே அம்பேத்கா் சிலை அவமதிப்பு
தொகுதி அறிமுகம்: ஊத்தங்கரை (தனி) - 51!
வீடியோக்கள்
Delhi Vs Chennai | முதல்வரின் சிறுபிள்ளைத்தனம்! அண்ணாமலை Press Meet | BJP | DMK
இணையதளச் செய்திப் பிரிவு

காட்ஸ் அண்ட் சோல்ஜர்ஸ் டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

டார்லிங் மறுவெளியீட்டு டிரைலர்!
தினமணி செய்திச் சேவை

சிஎஸ்கேவின் பாதை, இனி சிங்கப் பாதை! | Chennai Super Kings | CSK | Sanju Samson |
தினமணி செய்திச் சேவை

