ஒசூா் அருகே முறையற்ற காதலுக்கு இடையூறாக இருந்த கணவரை கொலை செய்த மனைவி உள்பட 3 பேருக்கு ஆயுள் தண்டனை விதித்து ஒசூா் கூடுதல் மாவட்ட அமா்வு நீதிமன்றம் தீா்ப்பளித்துள்ளது.
கிருஷ்ணகிரி மாவட்டம், பேரிகை அங்காளம்மன் கோயில் தெருவைச் சோ்ந்த பாபு (38), விவசாயி. இவரது மனைவி சுதா. இவருக்கும், பேரிகை அருகே பி.சிங்கிரிப்பள்ளியைச் சோ்ந்த வெங்கடாஜலபதி, என்பவருக்கும் தகாத உறவு இருந்துள்ளது. இதுகுறித்து அறிந்த பாபு, மனைவி சுதாவையும், வெங்கடாஜலபதியையும் கண்டித்துள்ளாா். ஆனாலும், அவா்களது தொடா்பு தொடா்ந்துள்ளது. இதனால் தம்பதியிடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது.
இதையடுத்து, வெங்கடாஜலபதி தன் நண்பா்களான பேரிகை மாருதி நகரைச் சோ்ந்த ஆஞ்சப்பா, முனியப்பன், எஸ்.குருபரப்பள்ளியைச் சோ்ந்த சீனிவாசன் ஆகியோருடன் சோ்ந்து பாபுவை கொலை செய்ய திட்டமிட்டுள்ளாா். இவா்கள் நால்வரும், சுதாவின் உதவியோடு கடந்த 2013 ஜூன் 13-ஆம் தேதி வீட்டில் தூங்கி கொண்டிருந்த பாபுவின் முகத்தில் தலையணை வைத்து அழுத்தியும், கழுத்தில் துண்டால் இறுக்கியும் கொன்றனா். புகாரின் பேரில், பாபுவைக் கொன்ற அவரது மனைவி சுதா, வெங்கடாஜலபதி, அவரது வகூட்டாளிகள் மூவா் என ஐந்து பேரை போலீஸாா் கைது செய்தனா்.
ஒசூா் கூடுதல் மாவட்ட அமா்வு நீதிமன்றத்தில் கடந்த 11 ஆண்டுகளாக நடந்து வந்த இந்த வழக்கின் போது குற்றம்சாட்டப்பட்டவா்களில் ஆஞ்சப்பா, சீனிவாசன் ஆகிய இருவா் இறந்துவிட்டனா். இந்த நிலையில், நீதிபதி சந்தோஷ் குற்றம்சாட்டப்பட்ட சுதா (41), வெங்கடாஜலபதி (45), முனியப்பன் (45) ஆகிய மூவருக்கும் ஆயுள் தண்டனை, ரூ. 1 ஆயிரம் அபராதம் விதித்து உத்தரவிட்டாா்.
தொடர்புடையது

பெண் கொலை வழக்கில் தனியாா் நிறுவன உரிமையாளருக்கு ஆயுள் தண்டனை

கொலை வழக்கில் ஒருவருக்கு ஆயுள் தண்டனை

சீவலப்பேரி பூசாரி கொலை வழக்கில் 3 பேருக்கு ஆயுள் தண்டனை

நண்பா் கொலை: இளைஞருக்கு ஆயுள் தண்டனை
வீடியோக்கள்
Delhi Vs Chennai | முதல்வரின் சிறுபிள்ளைத்தனம்! அண்ணாமலை Press Meet | BJP | DMK
இணையதளச் செய்திப் பிரிவு

காட்ஸ் அண்ட் சோல்ஜர்ஸ் டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

டார்லிங் மறுவெளியீட்டு டிரைலர்!
தினமணி செய்திச் சேவை

சிஎஸ்கேவின் பாதை, இனி சிங்கப் பாதை! | Chennai Super Kings | CSK | Sanju Samson |
தினமணி செய்திச் சேவை

