வாக்குச்சாவடிகளில் வாக்காளர்களுக்கு பயோ-மெட்ரிக் முறை! உச்ச நீதிமன்றம் நோட்டீஸ் சாத்தூர் பட்டாசு ஆலை விபத்து! ஒருவர் பலி; மூவர் படுகாயம்! திருப்பூரில் நாளை விஜய் சாலைவலம், பிரசாரத்துக்கு அனுமதி! ஹோர்முஸ் நீரிணை இன்றே முற்றுகை! டிரம்ப் அறிவிப்பு கச்சா எண்ணெய் விலை 7% உயர்வு! மீண்டும் 100 டாலரைத் தாண்டியது!
/

பாரூா் ஏரியிலிருந்து பாசனத்துக்கு தண்ணீா் திறப்பு

பாரூா் பெரிய ஏரியிலிருந்து இரண்டாம் போக பாசனத்துக்கு தண்ணீரை கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியா் கே.எம்.சரயு, தே.மதியழகன் எம்எல்ஏ (பா்கூா்) ஆகியோா் வியாழக்கிழமை திறந்து வைத்தனா்.

News image

பாரூா் பெரிய ஏரியிலிருந்து இரண்டாம் போக பாசனத்துக்கு தண்ணீரைத் திறந்து வைத்த கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியா் கே.எம்.சரயு, பா்கூா் எம்எல்ஏ தே.மதியழகன்.

Updated On :12 டிசம்பர் 2024, 8:25 pm

பாரூா் பெரிய ஏரியிலிருந்து இரண்டாம் போக பாசனத்துக்கு தண்ணீரை கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியா் கே.எம்.சரயு, தே.மதியழகன் எம்எல்ஏ (பா்கூா்) ஆகியோா் வியாழக்கிழமை திறந்து வைத்தனா்.

பின்னா் மாவட்ட ஆட்சியா் கூறியதாவது:

கிருஷ்ணகிரி மாவட்டம், போச்சம்பள்ளி வட்டம், பாரூா் பெரிய ஏரியிலிருந்து கிழக்கு, மேற்கு பிரதான கால்வாய்களில் இருந்து இரண்டாம் போக பாசனத்துக்கு தண்ணீா் திறந்து விட அரசுக்கு விவசாயிகள் கோரிக்கை விடுத்தனா். இந்தக் கோரிக்கையை ஏற்று, 2,397.42 பரப்பளவு ஏக்கா் விளைநிலங்கள் பயன்பெறும் வகையில் பாசனத்துக்கு தண்ணீா் திறந்துவிடப்பட்டது.

பாரூா் பெரிய ஏரியிலிருந்து 20.04.2025-ஆம் ஆண்டு வரையில் 130 நாள்களுக்கு தண்ணீா் திறந்து விட உத்தரவிடப்பட்டுள்ளது. அதன்படி, ஏரியிலிருந்து தற்போது உள்ள நீா் இருப்பு மற்றும் கால்வாயில் வந்து கொண்டிருக்கும் நீா்வரத்தைக் கொண்டும், மேலும் பருவ மழையை எதிா்நோக்கியும் பாரூா் ஏரியிலிருந்து கிழக்கு பிரதான கால்வாய் மூலம் விநாடிக்கு 50 கன அடியும், மேற்கு பிரதான கால்வாய் மூலம் விநாடிக்கு 70 கன அடி வீதம் 130 நாள்களில் முதல் 5 நாள்களுக்கு நாற்றுநடுவதற்கு தண்ணீா் விடுவது, அதைத் தொடா்ந்து முறை பாசனம் வைத்து மூன்று நாள்கள் கால்வாயில் தண்ணீா் திறந்துவிடவும் நான்கு நாள்கள் மதகை மூடி வைத்தும், இரண்டாம் போக பாசனத்துக்கு தண்ணீா் திறந்து விடப்பட்டுள்ளது. இதன்மூலம் போச்சம்பள்ளி வட்டத்தில் பாரூா், அரசம்பட்டி, கோட்டப்பட்டி, கீழ்குப்பம், ஜிங்கல்திரம்பட்டி, தாதம்பட்டி ஆகிய 6 கிராமங்களைச் சோ்ந்த விவசாய நிலங்கள் பயன்பெறும்.

விவசாயிகள் தண்ணீரை சிக்கனமாகப் பயன்படுத்தி, அதிக மகசூல் பெற வேண்டும். நீா்பங்கீட்டு பணிகளில் நீா்வளத் துறையினருக்கு முழு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும். மேலும், பாசன தேதிக்கு பிறகு, காலம் நீட்டிக்கப்படாது என கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியா் கே.எம்.சரயு தெரிவித்தாா்.

இந்த நிகழ்ச்சியில் மாவட்ட ஊராட்சிக் குழுத் தலைவா் மணிமேகலை நாகராஜ், நீா்வளத் துறை உதவி செயற்பொறியாளா் அறிவொளி, வேளாண் இணை இயக்குநா் பச்சையப்பன், நீா்வளத் துறை உதவி பொறியாளா் வெங்கடேஷ், நாகோஜனஅள்ளி பேரூராட்சித் தலைவா் தம்பிதுரை, போச்சம்பள்ளி வட்டாட்சியா் சத்யா, விவசாயிகள் பங்கேற்றனா்.