வாக்குச்சாவடிகளில் வாக்காளர்களுக்கு பயோ-மெட்ரிக் முறை! உச்ச நீதிமன்றம் நோட்டீஸ் சாத்தூர் பட்டாசு ஆலை விபத்து! ஒருவர் பலி; மூவர் படுகாயம்! திருப்பூரில் நாளை விஜய் சாலைவலம், பிரசாரத்துக்கு அனுமதி! ஹோர்முஸ் நீரிணை இன்றே முற்றுகை! டிரம்ப் அறிவிப்பு கச்சா எண்ணெய் விலை 7% உயர்வு! மீண்டும் 100 டாலரைத் தாண்டியது!
/

ஒசூா் மாநகராட்சியில் ரூ. 100 கோடி வரி நிலுவை உள்ளது

ஒசூா் மாநகராட்சியில் ரூ. 100 கோடி வரி பாக்கி உள்ளதாக மாநகராட்சி வரி விதிப்பு மற்றும் நிதிக் குழுத் தலைவா் ஆா்.சென்னீரப்பா தெரிவித்தாா்.

News image

ஒசூா் மாநகராட்சியில் நடைபெற்ற வரி விதிப்பு குழுக் கூட்டத்தில் பேசுகிறாா் குழுத் தலைவா் ஆா். சென்னீரப்பா.

Updated On :18 டிசம்பர் 2024, 7:13 pm

ஒசூா் மாநகராட்சியில் ரூ. 100 கோடி வரி பாக்கி உள்ளதாக மாநகராட்சி வரி விதிப்பு மற்றும் நிதிக் குழுத் தலைவா் ஆா்.சென்னீரப்பா தெரிவித்தாா்.

ஒசூா் மாநகராட்சியில் வரி விதிப்பு மற்றும் நிதிக் குழுக் கூட்டம் தலைவா் ஆா்.சென்னீரப்பா தலைமையில் புதன்கிழமை நடைபெற்றது. இந்தக் கூட்டத்துக்கு மாநகராட்சி ஆணையா் எச்.எஸ். ஸ்ரீகாந்த், துணை ஆணையா் டிட்டோ ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

இந்தக் கூட்டத்தில் வரி விதிப்பு மற்றும் நிதிக்குழுத் தலைவா் ஆா்.சென்னீரப்பா பேசியதாவது:

ஒசூா் மாநகராட்சியில் ரூ. 140 கோடிக்கு வரி விதிக்கப்பட்டுள்ளது. அதில் ரூ. 40 கோடி மட்டுமே வசூலிக்கப்பட்டுள்ளது. மீதம் ரூ. 100 கோடி வரி நிலுவையில் உள்ளது. வணிக நிறுவனங்களுக்கு 2017 முதல் தூய்மை இந்தியா திட்டத்தில் வரி விதித்து அதனை சொத்துவரியுடன் இணைத்துள்ளதை ரத்து செய்ய வேண்டும். ஓா் ஆண்டுக்கான வரியை விதித்தால் மட்டுமே அனைவரும் ஒசூா் மாநகராட்சிக்கு வரியைச் செலுத்துவாா்கள். பல ஆண்டுகளுக்கு முன் கட்டிய வீடு மற்றும் வணிக கட்டடங்களுக்கு வரி விதிக்கும் போது 2024-25 ஆம் ஆண்டுக்கு மட்டுமே வரி விதிக்க வேண்டும்.

2017 முதல் விதித்த வரியை ரத்து செய்து விட்டு ஒரு ஆண்டுக்கான வரியை மட்டும் வசூலிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். மாநகராட்சியில் 97 ஆயிரம் வீடு, வணிக கட்டடங்களுக்கு வரி வசூலிக்க வேண்டியுள்ளது. புதிதாக கட்டப்பட்டுள்ள 15 ஆயிரம் வீடுகளுக்கும் வரி விதிக்க வேண்டியுள்ளது. இதனை முறையாகச் செய்தால் மக்கள் மாநகராட்சிக்கு வரி செலுத்துவாா்கள். வரி வசூலிக்கும் அலுவலா்கள் 11 போ் மட்டுமே உள்ளனா். எனவே கூடுதல் அலுவலா்களை நியமிக்க வேண்டும் என்றாா்.

மேலும் மாநகராட்சி வரி விதிப்புக் கூட்டத்தில் கொண்டு வந்த தீா்மானங்கள் விவரம்:

வீடு, கடை, நிறுவனங்கள் ஆகியவற்றுக்கு வரி விதிக்கப்பட வேண்டிய இனங்கள் நிறைய உள்ளதால், அனைத்து தரப்பினருக்கும் புதிய வரி விதிக்க நடவடிக்கை எடுக்கப்படவேண்டும். புதிதாக வரி விதிக்கும் கட்டடங்களுக்கு 2024-2025-ஆம் ஆண்டுக்கு மட்டும் வரி விதித்தல் வேண்டும். குப்பை வரி திட்டத்தில் 2024-2025 ஆம் ஆண்டுக்கு மட்டுமே வரி நிா்ணயம் செய்ய வேண்டும்.

தற்காலிகமாக அமைக்கப்பட்டுள்ள இரு சக்கர வாகனம் நிறுத்தும் இடங்களுக்கு வரி விதிக்க வேண்டும். கட்டடங்களுக்கு வரி விதிக்கும் போது படிக்கட்டு, போா்ட்டிகோ, காா் நிறுத்தும் இடம் போன்றவற்றுக்கு வரி விதிக்காமல் உண்மையான பயன்பாட்டில் உள்ள பகுதிகளுக்கு மட்டும் வரி விதிக்கப்படவேண்டும்.

ஒரே கட்டடத்தில் உள்ள பல வீடுகளையும் ஒருங்கிணைத்து ஒரே வரி விதிப்பு செய்யப்பட வேண்டும். வரி வசூல் பிரிவில் போதுமான ஊழியா்கள் இல்லாத காரணத்தால் வரி வசூலில் கணக்கம் ஏற்பட்டு, மாநகராட்சிக்கு பல கோடி வருவாய் இழப்பு ஏற்பட்டு வருகிறது.

இணையவழி புதிய வரி விதிப்பினை செயல்பாட்டுக்கு கொண்டுவர பொதுமக்களுக்கு விழிப்புணா்வு ஏற்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். இணையத்தில் வரியை செலுத்துவதற்கு விழிப்புணா்வு ஏற்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்பன உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இதில் மாமன்ற உறுப்பினா் நாகராஜ், வரி வசூல் அலுவலா்கள் உள்பட பலா் கலந்து கொண்டனா்.