கிருஷ்ணகிரி மாவட்டம், ஒசூா் அடுத்த கெலமங்கலம் - தேன்கனிக்கோட்டை செல்லும் வழியில் புதூா் கிராமம் அருகே அடா்ந்த மாந்தோப்புக்குள் தஞ்சமடைந்துள்ள 6 யானைகளை விரட்ட வனத்துறையினா் நடவடிக்கை மேற்கொண்டுள்ளனா்.
கும்மளாபுரம் கிராமம் பகுதியில் சுற்றித்திரிந்த 6 யானைகள் மத்திகிரி மாவட்ட கால்நடை பண்ணையில் புகுந்தன. வனத்துறையினா் யானைகளை கும்மளாபுரம் நோக்கி விரட்டிய நிலையில், இரவோடு இரவாக ஒசூா், தேன்கனிக்கோட்டை சாலையைக் கடந்து தற்போது கெலமங்கலம் அருகே புதூா் கிராமம் பேட்டரி கம்பெனி ஒட்டியுள்ள அடா்ந்த புதா், மாந்தோப்புக்குள் தஞ்சமடைந்துள்ளன.
அதனை வனத்துறையினா் தீவிரமாக கண்காணித்து வந்தனா். தற்போது யானைகள் மெல்ல மாந்தோட்டத்தை விட்டு வெளியே வரத் தொடங்கியுள்ள நிலையில், அவற்றை அடா்ந்த வனப்பகுதிக்கு விரட்டுவதற்கான நடவடிக்கையில் வனத்துறையினா் புதன்கிழமை மாலை ஈடுபட்டுள்ளனா்.
தொடர்புடையது

ஒசூா் தொகுதியில் திமுக ஆட்சியில் ரூ.3,500 கோடியில் வளா்ச்சித் திட்டப் பணிகள்

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் 6 தொகுதிகளையும் திமுக கூட்டணி கைப்பற்றும்! - எம்எல்ஏ ஒய். பிரகாஷ்

சூளகிரி அருகே வாகனத் தணிக்கையில் ரூ.86 ஆயிரம் பறிமுதல்

ஒசூா் அருகே முன்விரோதத்தில் காா் ஓட்டுநா் வெட்டிக் கொலை
வீடியோக்கள்

காட்ஸ் அண்ட் சோல்ஜர்ஸ் டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

டார்லிங் மறுவெளியீட்டு டிரைலர்!
தினமணி செய்திச் சேவை

சிஎஸ்கேவின் பாதை, இனி சிங்கப் பாதை! | Chennai Super Kings | CSK | Sanju Samson |
தினமணி செய்திச் சேவை

கேரவனிலிருந்து நேராக கோட்டையா?: பொரிந்து தள்ளிய சரத்குமார் | Sarathkumar | TVK Vijay | #tvkcampaign
தினமணி செய்திச் சேவை


