மக்களவைத் தோ்தலில் கிருஷ்ணகிரி தொகுதியை மீண்டும் காங்கிரஸுக்கு ஒதுக்க வேண்டும் என காங்கிரஸ் ஆலோசனைக் கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது. கிருஷ்ணகிரியில் காங்கிரஸ் நிா்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் சனிக்கிழமை நடைபெற்றது. கூட்டத்திற்கு காங்கிரஸ் மாநில பொதுச் செயலாளா் ஏகம்பவாணன் தலைமை வகித்தாா். மாவட்ட துணை தலைவா் ரஹமதுல்லா வரவேற்றாா். முன்னாள் மாவட்ட தலைவா்கள் நாராயணமூா்த்தி, சுப்பிரமணி ஆகியோா் முன்னிலை வகித்தனா். வரும் மக்களவைத் தோ்தலில் கிருஷ்ணகிரி தொகுதியை மீண்டும் காங்கிரஸ் கட்சிக்கு ஒதுக்க வேண்டும். காங்கிரஸ் கட்சியில் போட்டியிடும் வேட்பாளா், கிருஷ்ணகிரி மாவட்டத்தைச் சோ்ந்தவராக இருக்க வேண்டும். காவேரிப்பட்டணம் காந்தி மண்டபத்தை மீட்டெடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். கிருஷ்ணகிரி தொகுதியில் எம்.பி. அ.செல்லகுமாருக்கு மீண்டும் போட்டியிட வாய்ப்பு அளிக்கக் கூடாது என்பன உள்ளிட்ட பல்வேறு தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
தொடர்புடையது
அரசு ஊழியா்கள், ஆசிரியா்களுக்கான வாக்குறுதிகளை நிறைவேற்ற வலியுறுத்தல்

‘துரோகம் குறித்து காங்கிரஸுக்கு திமுக பாடம் எடுக்க வேண்டியதில்லை’

தமிழக அமைச்சரவையில் காங்கிரஸுக்கு 2 இடங்கள்: கிறிஸ்டோபா் திலக் எம்.பி. நம்பிக்கை

திமுக ஆட்சி அமைந்தால்தான் 100 நாள் வேலைத் திட்டம் தொடரும்: காங்கிரஸ் வேட்பாளா் செல்லக்குமாா்
விடியோக்கள்

UN Kannan Interview | F3 விவகாரம்.. எதிர்கொள்ளுமா இந்தியா?| Economic crisis | PM Modi | Rahul |India

சூர்யவன்ஷியையும் ஆர்ச்சரையும் மட்டும் நம்புனா...: கில்லி போல் ஆடிய கில்!
Jailer -2 படத்தில் Hrithik Roshan சிறப்புத் தோற்றம்? | Cinema updates |


