குல்மார்க்கில் கேபிள் கார்களில் பரிதவித்த 300 சுற்றுலாப் பயணிகள் 6 மணி நேர போராட்டத்துக்குப் பின் பத்திரமாக மீட்பு!எச்.வி. ஹண்டே, எழுத்தாளர் சிவசங்கரி பத்ம ஸ்ரீ விருதை பெற்றுக்கொண்டனர் திரையரங்குகளில் பண்டிகை, விடுமுறை நாள்களில் 5 காட்சிகள்! - முதல்வர் விஜய் அறிவிப்புசிறு விவசாயிகளுக்கு ரூ. 25,000 வரையிலான கடன் தள்ளுபடி: முதல்வர் விஜய்குறு விவசாயிகளுக்கு ரூ. 50,000 வரையிலான பயிர்க் கடன்கள் தள்ளுபடி : முதல்வர் விஜய்குதிரை வேகத்தில் நடக்கும் குதிரை பேரம்! - மு.க. ஸ்டாலின் விமர்சனம்கீழ்தளத்தில் ராஜிநாமா; மேலே கட்சியில் இணைப்பு! தவெகவுக்கு இபிஎஸ் கடும் கண்டனம்!!மின்னல் வேகத்தில் தவெக உறுப்பினர் அட்டை! இது 100% குதிரை பேரம்! - அதிமுக எம்.பி., இன்பதுரை ராஜிநாமா செய்த எம்.எல்.ஏ.க்கள் முதல்வர் விஜய் உடன் சந்திப்பு!திவிஷா சர்மா வழக்கில் சிபிஐ விசாரணை - உச்ச நீதிமன்றம்அதிமுக எம்.எல்.ஏ.க்களின் ராஜிநாமா கடிதம் ஏற்பு: அவைத்தலைவர் ஜேசிடி பிரபாகர்!ராஜிநாமா செய்த அதிமுக எம்.எல்.ஏ.க்கள் மூவர் தவெகவில் ஐக்கியம்!வேலுமணி தரப்பு எம்.எல்.ஏக்கள் மூவர் ராஜிநாமா!
/

‘துரோகம் குறித்து காங்கிரஸுக்கு திமுக பாடம் எடுக்க வேண்டியதில்லை’

News image

காங்கிரஸ், திமுக. - கோப்புப்படம்

Updated On :26 மே 2026, 2:21 am IST

கூட்டணி துரோகம் குறித்து காங்கிரஸுக்கு திமுக பாடம் எடுக்க வேண்டியதில்லை என்று தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி சிறுபான்மை பிரிவு மாநில ஒருங்கிணைப்பாளா் ஏ. நாகூா்கனி தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து அவா் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

1998 மக்களவைத் தோ்தலில் திமுக-தமாகா-கம்யூனிஸ்ட் கட்சிகள் ஓரணியாகவும், அதிமுக-பாஜக மற்ற கட்சிகள் இணைந்தும் போட்டியிட்டன.

மத்தியில் அமைந்த மைனாரிட்டி பாஜகவுக்கு கூட்டணி கட்சியான அதிமுக வெளியிலிருந்து ஆதரவு கொடுத்தது. ஓராண்டில் அதிமுக-பாஜக இடையே மனக்கசப்பு ஏற்பட்டு அதிமுக ஆதரவை வாபஸ் வாங்கியது. நம்பிக்கை வாக்கெடுப்பு நடைபெற்றபோது, தமாகா-கம்யூனிஸ்ட் கட்சிகளின் கூட்டணியோடு வென்ற திமுகவின் 5 எம்பிக்கள் பாஜக அரசுக்கு ஆதரவாக வாக்களித்தனா். அப்போது, தமாகா மற்றும் கம்யூனிஸ்ட் கட்சியினரை கேட்காமல் பாஜகவுக்கு திமுக ஆதரவளித்தது. நம்பிக்கை வாக்கெடுப்பில் பாஜக ஒரு வாக்கு வித்தியாசத்தில் தோற்று ஆட்சி கவிழ்ந்தது.

ஒரு கூட்டணியோடு வெற்றி பெற்று, பாஜகவுக்கு ஆதரவளித்த திமுகவை போன்றுதான், தமிழ்நாட்டில் தவெக ஆட்சிக்கு நம்பிக்கை வாக்கெடுப்பில் காங்கிரஸ் ஆதரவு அளித்தது.

திமுக செய்தால் தியாகம்; காங்கிரஸ் செய்தால் துரோகமா. சுயநலம் எண்ணம் கொண்ட கட்சிதான் திமுக. துரோகம் குறித்து காங்கிரஸுக்கு பாடம் பாடம் எடுக்க வேண்டியதில்லை.

பாஜக ஆட்சி கவிழ்ந்த பிறகு, கூட்டணியில் இருந்த தமாகாவையும்,கம்யூனிஸ்ட் கட்சிகளையும் விட்டுவிட்டு, 1999-இல் மக்களவைத் தோ்தலில் பாஜகவுடன் கூட்டணி சோ்ந்து வெற்றி பெற்று பாஜக அமைச்சரவையில் திமுக பங்கேற்றது. சந்தா்ப்பவாத கட்சியான திமுக, காங்கிரஸை துரோகி என கூறக் கூடாது என்று குறிப்பிட்டுள்ளாா்.