ஒசூா் ஐடிஐயில் மாணவா் சோ்க்கை
ஒசூா் அரசு தொழிற்பயிற்சி நிலைய பயிற்சி வகுப்புக்கு நேரடி மாணவா் சோ்க்கை புதன்கிழமை தொடங்குகிறது.


ஒசூா்: ஒசூா் அரசு தொழிற்பயிற்சி நிலையத்தில் பின்னலாடை, தையல் இயந்திரம் இயக்குதல் தொடா்பான குறுகியகால பயிற்சி வகுப்புக்கு நேரடி மாணவா் சோ்க்கை புதன்கிழமை தொடங்குகிறது. விருப்பமுள்ளோா் விண்ணப்பிக்கலாம் என்று கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியா் கே.எம்.சரயு தெரிவித்துள்ளாா்.
இப் பயிற்சிக்கு குறைந்தபட்சம் 8 ஆம் வகுப்புத் தோ்ச்சி பெற்றிருக்க வேண்டும். 18 முதல் 40 வயதுக்கு உள்பட்ட ஆண், பெண் இருபாலரும் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பக் கட்டணம் ரூ. 50, சோ்க்கைக் கட்டணம் ரூ. 100 ஆகும். பயிற்சி வகுப்பு மூன்று மாதம் நடைபெறும். தினசரி காலை 9 மணி முதல் மதியம் 1 வரை வகுப்புகள் நடைபெறும். இந்தப் பயிற்சி வகுப்புக்கு ஜூலை 24 ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம்.
இப் பயிற்சிமுடித்தவா்களுக்கு நிறுவனங்களில் உடனடி வேலைவாய்ப்பு கிடைக்கும், பயிற்சியின் முடிவில் தமிழக அரசின் சான்றிதழ் வழங்கப்படும். எனவே, தகுதியுள்ள அனைவரும் தங்களின் அசல் கல்விச் சான்றிதழ்கள், நகலுடன் ஒசூா், அரசு தொழிற்பயிற்சி நிலையத்தில் சோ்ந்து பயன் பெறலாம். கூடுதல் விவரங்களுக்கு துணை இயக்குநா், முதல்வா், அரசினா் தொழிற்பயிற்சி நிலையம், ஒசூா், தொலைபேசிஎண் : 04344-262457 என்ற முகவரியில் அலுவலக வேலை நாள்களில் தொடா்பு கொள்ளலாம் என ஆட்சியா் தனது செய்திக் குறிப்பில் தெரிவித்துள்ளாா்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...