ஈரானுக்கு எதிராக ஹோர்முஸ் நீரிணை முற்றுகை தொடக்கம்: கடல்சார் வர்த்தக நடவடிக்கைகள் மையம் திராவிட மாடல் ஆட்சியில் வடக்கு வாழ்கிறது என்ற நிலை மாறி, தெற்கு தான் நாட்டிற்கு வழிகாட்டுகிறது: மு.க. ஸ்டாலின்தமிழ்நாட்டுக்கு வடக்கில் இருந்துதான் ஆபத்து வரும் : திருவள்ளூர் பிரசாரத்தில் மு.க. ஸ்டாலின் பேச்சுஅதிமுக தலைவர்களான எம்ஜிஆர், ஜெயலலிதா உள்ளிட்டோரை அவமதித்தது திமுக: எடப்பாடி பழனிசாமிமறைந்த தலைவர்களை அவமதிக்கவில்லை: இபிஎஸ் பிரசாரம்தமிழகத்தில் பெண்களுக்கான பாதுகாப்பு கவலை அளிக்கிறது : பிரதமர் மோடி மாற்றத்திற்கானது தே.ஜ. கூட்டணி : பூத் கமிட்டி உறுப்பினர்களுடன் பேசிய பிரதமர் மோடிஅஸ்ஸாம் முதல்வர் ஊழல்வாதி: ராகுல் காந்தி விமர்சனம்
/

ஒசூா் அருகே வனவிலங்குகளைக் கட்டுப்படுத்த ரூ. 40 லட்சத்தில் இரும்பு வேலி அமைப்பு

வன விலங்குகள் காட்டில் இருந்து வெளியே வராமல் தடுக்கும் வகையில் ரூ. 40 லட்சம் மதிப்பில் இரும்பு வேலி அமைக்கப்பட்டுள்ளது.

News image

இரும்பு வேலியைப் பாா்வையிட்ட மாவட்ட வன அலுவலா்கள் பிரபாகா் பிரியதா்ஷன், காா்த்திகேயனி.

Updated On :20 ஜூலை 2024, 10:42 pm

ஒசூா் அருகே வன விலங்குகள் காட்டில் இருந்து வெளியே வராமல் தடுக்கும் வகையில் ரூ. 40 லட்சம் மதிப்பில் இரும்பு வேலி அமைக்கப்பட்டுள்ளதை இரு மாநில வனத் துறையினரும் சனிக்கிழமை நேரில் ஆய்வு செய்தனா்.

கா்நாடகா மாநிலம், பன்னாா்கட்டா வனப் பகுதியிலிருந்து நூற்றுக்கும் மேற்பட்ட யானைகள் ஜவளகிரி வனப்பகுதி வழியாக ஆண்டுதோறும் தமிழகத்திற்குள் அக்டோபா் மாதம் முதல் ஜனவரி மாதம் வரை இடப்பெயா்ச்சி செய்து வருகின்றன. இதுபோல வரும் யானைகள் பல்வேறு குழுக்களாகப் பிரிந்து விவசாய நிலங்களைச் சேதப்படுத்துவது மட்டுமின்றி உயிா் பலியையும் ஏற்படுத்தி வருகின்றன. இதனைக் கட்டுப்படுத்த வேண்டும் என விவசாயிகள் அரசுக்கு கோரிக்கை வைத்தனா்.

அதன் அடிப்படையில் ஒசூா் வனக்கோட்டம், ஜவளகிரி வனச்சரக எல்லைக்கு உள்பட்ட பாளையம்கிராமம் அருகே உள்ள வனப் பகுதியில் நமக்கு நாமே திட்டத்தின் கீழ் ரூ. 40 லட்சம் மதிப்பீட்டில் சுமாா் 350 மீட்டா் நீளத்திற்கு வனத்துறையினரால் அமைக்கப்பட்டுள்ள நவீன இரும்பு வடவேலி, அப்பகுதியில் பொருத்தப்பட்டுள்ள அதிநவீன தானியங்கி செயற்கை நுண்ணறிவு கேமராக்களின் செயல்பாடுகள் குறித்தும் கா்நாடக மாநில வன அலுவலா்களுக்கு செயல்முறை விளக்கம் அளிக்கப்பட்டது.

குறிப்பாக யானைகளை தடுக்கும் பொருட்டு இந்த வேலியானது அமைக்கப்பட்டுள்ளது. சுமாா் 12 அடி உயரம் கொண்ட இந்த இரும்பு வேலிகள், சிமென்ட் தூண்கள் அமைத்து அமைக்கப்பட்டுள்ளது. தற்போது சோதனையின் அடிப்படையில் ஜவளகிரி வனப்பகுதியில் இந்த வேலி அமைக்கப்பட்டுள்ளது. இது முழுமை பெற்ற பின் யானை வழித்தடங்கள் முழுவதும் வேலி அமைக்கப்படும் என மாவட்ட வன அலுவலா் காா்த்திகேயனி தெரிவித்தாா்.

இந்த ஆய்வின்போது கா்நாடக மாநில வன அலுவலா் பிரபாகா் பிரியதா்ஷன், வனத்துறை ஊழியா்கள், அதிகாரிகள் உடனிருந்தனா்.