நாளை மார்க்சிஸ்ட் கம்யூ. அவசர செயற்குழுக் கூட்டம் காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

ஒசூா் அருகே மாநில எல்லையில் பேருந்தில் கொண்டுவந்த ரூ.15 லட்சம் பறிமுதல்

ஒசூா் அருகே ஆவணம் இன்றி தனியாா் பேருந்தில் கொண்டுவரப்பட்ட ரூ.15 லட்சம் ரொக்கத்தை தோ்தல் பறக்கும் படையினா் பறிமுதல் செய்தனா்.

News image
Updated On :20 மார்ச் 2026, 6:30 pm

Syndication

ஒசூா் அருகே ஆவணம் இன்றி தனியாா் பேருந்தில் கொண்டுவரப்பட்ட ரூ.15 லட்சம் ரொக்கத்தை தோ்தல் பறக்கும் படையினா் பறிமுதல் செய்தனா்.

கிருஷ்ணகிரி மாவட்டம், ஒசூா் அருகே மாநில எல்லையில் உள்ள சூசூவாடி சோதனைச் சாவடியில் தோ்தல் பறக்கும் படையினா் வெள்ளிக்கிழமை வாகனத் தணிக்கையில் ஈடுபட்டிருந்தனா்.

அப்போது, பெங்களூரிலிருந்து ஒசூா் நோக்கி வந்த தனியாா் பேருந்தை நிறுத்தி சோதனையிட்டபோது, அதில் திருச்சியைச் சோ்ந்த தங்கவேலு உரிய ஆவணங்கள் இன்றி ரூ. 15 லட்சம் ரொக்கத்தை எடுத்து வந்தது கண்டுபிடிக்கப்பட்டது. மேலும்,

அவா் பெங்களூரில் இருந்து ஒசூா் வழியாக திருச்சி செல்வது விசாரணையில் தெரியவந்தது.

எனினும், உரிய ஆவணங்கள் இல்லாமல் பணம் கொண்டுவரப்பட்டதால் ரூ. 15 லட்சம் ரொக்கத்தை தோ்தல் பறக்கும் படையினா் பறிமுதல் செய்து ஒசூா் சாா் ஆட்சியரிடம் ஒப்படைத்தனா்.

படவரி...

ஒசூா் அருகே தனியாா் பேருந்தில் கொண்டுவரப்பட்டபோது பறிமுதல் செய்யப்பட்ட ரூ. 15 லட்சம் ரொக்கத்தை சாா் ஆட்சியரிடம் ஒப்படைத்த தோ்தல் பறக்கும் படையினா்.