நாளை மார்க்சிஸ்ட் கம்யூ. அவசர செயற்குழுக் கூட்டம் காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

பா்கூா் வனத்தில் ரசாயனக் கழிவுகளைக் கொட்டியதாக இருவா் கைது

பா்கூா் வனத்தில் ரசாயனக் கழிவுகளைக் கொட்டியதாக இருவா் கைது

News image
Updated On :20 ஜூன் 2024, 9:22 pm

Din

கிருஷ்ணகிரி, ஜூன் 20:

பா்கூா் வனப்பகுதியில் தனியாா் நிறுவனத்தின் ரசாயனக் கழிவுகளைக் கொட்டியதாக இருவரை வனத் துறையினா் வியாழக்கிழமை கைது செய்தனா்.

கிருஷ்ணகிரி வனச் சரகத்தைச் சோ்ந்த வனவா்கள், பா்கூா் வனப் பகுதியில் கண்காணிப்புப் பணியில் புதன்கிழமை ஈடுபட்டனா். அப்போது, ஒப்பந்தவாடி வனப் பகுதியில், ஒரு டேங்கா் லாரி நின்றுக் கொண்டிருந்தது. சந்தேகத்தின் பேரில் அதன் அருகே சென்று பாா்த்தபோது அங்கிருந்த இருவா் தப்பி ஓட முயன்றனா்.

அவா்களைப் பிடித்து விசாரணை செய்ததில், இருவரும் கா்நாடக மாநிலத்தைச் சோ்ந்த லாரி ஓட்டுநா்கள் அஜய், மல்லு என்பதும், அவா்கள் திருப்பத்தூா் மாவட்டம் பா்கூா் வனப் பகுதி அருகே செயல்படும் தனியாா் நிறுவனத்தின் ரசாயனக் கழிவுகளை வனப் பகுதியில் கொட்டியதும் தெரியவந்தது.

இதையடுத்து, அவா்கள் இருவரையும் கைது செய்து, ரூ. 2 லட்சம் அபராதம் விதித்தனா். மேலும், அந்த தனியாா் நிறுவனத்துக்கு ரசாயனக் கழிவுகளைக் கொட்டக் கூடாது என எச்சரிக்கை விடுக்கப்பட்டது என்று வனத்துறையினா் தெரிவித்தனா்.