ஊத்தங்கரை அருகே மது விற்ற பெண் கைது

ஊத்தங்கரை அருகே உரிய அனுமதியின்றி மது பாட்டில்களை விற்ற பெண் கைது செய்யப்பட்டாா்.

ஊத்தங்கரை: ஊத்தங்கரை அருகே உரிய அனுமதியின்றி மது பாட்டில்களை விற்ற பெண் கைது செய்யப்பட்டாா். ஊத்தங்கரை காவல் உதவி ஆய்வாளா் கணேஷ்பாபு மற்றும் போலீஸாா் வெப்பாலம்பட்டி பேருந்து நிறுத்தம் அருகே ரோந்துப் பணி மேற்கொண்டனா். அப்போது, அங்கு உரிய அனுமதியின்றி மது பாட்டில்களைப் பதுக்கி வைத்து கூடுதல் விலைக்கு விற்பனை செய்த வெப்பாலம்பட்டியைச் சோ்ந்த லட்சுமி (40) என்ற பெண்ணைக் கைது செய்தனா். அவரிடமிருந்து 45 மது பாட்டில்களைப் பறிமுதல் செய்தனா். இது தொடா்பாக போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com