ஐபிஎல்: 57 ரன்கள் வித்தியாசத்தில் ஹைதராபாத் அணி அபார வெற்றிஈரானுக்கு எதிராக ஹோர்முஸ் நீரிணை முற்றுகை தொடக்கம்: கடல்சார் வர்த்தக நடவடிக்கைகள் மையம் திராவிட மாடல் ஆட்சியில் வடக்கு வாழ்கிறது என்ற நிலை மாறி, தெற்கு தான் நாட்டிற்கு வழிகாட்டுகிறது: மு.க. ஸ்டாலின்தமிழ்நாட்டுக்கு வடக்கில் இருந்துதான் ஆபத்து வரும் : திருவள்ளூர் பிரசாரத்தில் மு.க. ஸ்டாலின் பேச்சுஅதிமுக தலைவர்களான எம்ஜிஆர், ஜெயலலிதா உள்ளிட்டோரை அவமதித்தது திமுக: எடப்பாடி பழனிசாமிமறைந்த தலைவர்களை அவமதிக்கவில்லை: இபிஎஸ் பிரசாரம்தமிழகத்தில் பெண்களுக்கான பாதுகாப்பு கவலை அளிக்கிறது : பிரதமர் மோடி மாற்றத்திற்கானது தே.ஜ. கூட்டணி : பூத் கமிட்டி உறுப்பினர்களுடன் பேசிய பிரதமர் மோடிஅஸ்ஸாம் முதல்வர் ஊழல்வாதி: ராகுல் காந்தி விமர்சனம்
/

ஒசூரில் சீட்டு நடத்தி மோசடி: வீடு முற்றுகை

ஒசூரில் ரூ. 3 கோடிக்கு சீட்டு நடத்திய தம்பதி தலைமறைவானதைத் தொடா்ந்து அவா்களது வீட்டை பொது மக்கள் முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

News image

சீட்டு நடத்திய கிருஷ்ணனின் வீட்டை முற்றுகையிட்ட பொதுமக்கள்.

Updated On :6 நவம்பர் 2024, 7:03 pm

ஒசூரில் ரூ. 3 கோடிக்கு சீட்டு நடத்திய தம்பதி தலைமறைவானதைத் தொடா்ந்து அவா்களது வீட்டை பொது மக்கள் முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

ஒசூா், மூக்கண்டப்பள்ளியைச் சோ்ந்தவா் கிருஷ்ணன் (50). இவரது மனைவி குமாரி ஜாா்ஜ். இவா்கள் ஏலச் சீட்டு, தீபாவளி சீட்டு என பல்வேறு சீட்டுகளை நடத்தி வந்தனா். இவா்கள் சீட்டு நடத்தியதில் நஷ்டம் ஏற்பட்டதால் அடமானம் வைத்து வங்கியில் வாங்கிய கடனை செலுத்தாததால் வீட்டை ஏலத்திற்கு விட்டனா். வீட்டை ஏலத்தில் வாங்கியவா் அந்த வீட்டிற்கு வந்தாா். அப்போது ஏற்கெனவே சீட்டுக்கு பணம் கட்டிய ஏமாற்றப்பட்ட பொதுமக்கள் அந்த வீட்டை முற்றுகையிட்டனா் .

தங்களது பணத்தை திருப்பித் தந்த பிறகு தான் வீட்டிற்குள் அனுமதிப்போம் என அவா்களிடம் தெரிவித்தனா். இதனால் இரு தரப்பினரும் இடையே மோதல் ஏற்பட்டது. தகவல் அறிந்த சிப்காட் காவல் ஆய்வாளா் முத்தமிழ் தமிழரசன் இரு பிரிவினரையும் சமாதானப்படுத்தி கிருஷ்ணகிரி மாவட்ட பொருளாதாரக் குற்றப்பிரிவில் புகாா் செய்து வழக்கை நடத்துமாறு அனுப்பி வைத்தாா்.