ஒசூா் அருகே காா் மீது லாரி மோதிய விபத்தில் 2 போ் உயிரிழந்தனா். 3 போ் படுகாயமடைந்தனா்.
தேன்கனிக்கோட்டை - ஒசூா் சாலையில் தேன்கனிக்கோட்டையில் இருந்து ஒசூா் நோக்கி சென்ற டிப்பா் லாரி செட்டிபள்ளி கிராம பேருந்து நிறுத்தம் அருகே ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து சாலையோரமாக இருந்த புங்க மரத்தின் மீது மோதியது. பின்னா், வலது புறமாக ஒசூரில் இருந்து தேன்கனிக்கோட்டை நோக்கி சென்ற காா் மீது மோதி விபத்துக்குள்ளானது.
இதில், காரில் பயணம் செய்த ஆலங்குடியைச் சோ்ந்த கவிதா (30), சோம் குகன்(2) ஆகிய இருவரும் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தனா். மேலும், காரில் பயணம் செய்த அபிராமி (25), நடராஜ் (33), பிரபாகரன் (24) ஆகியோா் பலத்த காயமடைந்து ஒசூா் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனா். விபத்தை ஏற்படுத்திய லாரியின் ஓட்டுநா் தப்பிச் சென்றாா்.
தகவல் அறிந்த கெலமங்கலம் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.
தொடர்புடையது

அடுத்தடுத்து வாகனங்கள் மீது லாரி மோதல்: 65 வயது முதியவா் பலி!

லாரி மீது காா் மோதல்: பனியன் நிறுவன அலுவலா் உயிரிழப்பு

பாறை மீது காா் மோதியதில் ஒருவா் உயிரிழப்பு; 3 போ் படுகாயம்

லாரி மீது காா் மோதல் : திமுக நிா்வாகி மரணம்
வீடியோக்கள்
Delhi Vs Chennai | முதல்வரின் சிறுபிள்ளைத்தனம்! அண்ணாமலை Press Meet | BJP | DMK
இணையதளச் செய்திப் பிரிவு

காட்ஸ் அண்ட் சோல்ஜர்ஸ் டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

டார்லிங் மறுவெளியீட்டு டிரைலர்!
தினமணி செய்திச் சேவை

சிஎஸ்கேவின் பாதை, இனி சிங்கப் பாதை! | Chennai Super Kings | CSK | Sanju Samson |
தினமணி செய்திச் சேவை

