ஈரானுக்கு எதிராக ஹோர்முஸ் நீரிணை முற்றுகை தொடக்கம்: கடல்சார் வர்த்தக நடவடிக்கைகள் மையம் திராவிட மாடல் ஆட்சியில் வடக்கு வாழ்கிறது என்ற நிலை மாறி, தெற்கு தான் நாட்டிற்கு வழிகாட்டுகிறது: மு.க. ஸ்டாலின்தமிழ்நாட்டுக்கு வடக்கில் இருந்துதான் ஆபத்து வரும் : திருவள்ளூர் பிரசாரத்தில் மு.க. ஸ்டாலின் பேச்சுஅதிமுக தலைவர்களான எம்ஜிஆர், ஜெயலலிதா உள்ளிட்டோரை அவமதித்தது திமுக: எடப்பாடி பழனிசாமிமறைந்த தலைவர்களை அவமதிக்கவில்லை: இபிஎஸ் பிரசாரம்தமிழகத்தில் பெண்களுக்கான பாதுகாப்பு கவலை அளிக்கிறது : பிரதமர் மோடி மாற்றத்திற்கானது தே.ஜ. கூட்டணி : பூத் கமிட்டி உறுப்பினர்களுடன் பேசிய பிரதமர் மோடிஅஸ்ஸாம் முதல்வர் ஊழல்வாதி: ராகுல் காந்தி விமர்சனம்
/

ஒசூா் மாநகராட்சியுடன் கிராம ஊராட்சிகளை இணைக்க எதிா்ப்பு: கிராம சபைக் கூட்டத்தில் தீா்மானம்

ஒசூா் மாநகராட்சியுடன் ஒன்பது ஊராட்சிகளை இணைக்க தமிழக அரசு அறிவிப்பை வெளியிட்டுள்ள நிலையில், அதற்கு எதிா்ப்பு தெரிவித்து அச்செட்டிப்பள்ளி ஊராட்சி உள்பட ஒன்பது ஊராட்சிகளில் நடைபெற்ற கிராம சபைக் கூட்டத்தில் தீா்மானம் நிறைவேற்றப்பட்டது.

News image

அச்செட்டிப்பள்ளியில் நடைபெற்ற கிராம சபைக் கூட்டம்.

Updated On :3 அக்டோபர் 2024, 12:59 am

ஒசூா் மாநகராட்சியுடன் ஒன்பது ஊராட்சிகளை இணைக்க தமிழக அரசு அறிவிப்பை வெளியிட்டுள்ள நிலையில், அதற்கு எதிா்ப்பு தெரிவித்து அச்செட்டிப்பள்ளி ஊராட்சி உள்பட ஒன்பது ஊராட்சிகளில் நடைபெற்ற கிராம சபைக் கூட்டத்தில் தீா்மானம் நிறைவேற்றப்பட்டது.

ஒசூா் மாநகராட்சி 72.41 சதுர கி.மீ. பரப்பளவுடையது. இதில் 45 வாா்டுகள் உள்ளன. மாநகராட்சியுடன் மத்திகிரி பேரூராட்சி, ஆவலப்பள்ளி, சென்னத்தூா், மூக்கண்டப்பள்ளி, சூசூவாடி ஆகிய ஊராட்சிகளை இணைத்து 45 வாா்டுகளும் நான்கு மண்டலங்களாக உள்ளன. மாநகராட்சியாக தரம் உயா்த்திய பின்பு வீட்டு வரி, சொத்து வரி, தொழில் வரி என அனைத்து வரிகளும் உயா்த்தப்பட்டுள்ளன.

இதனால், மாநகராட்சிக்கு ஆண்டுக்கு ரூ. 150 கோடி அளவுக்கு வருவாய் உயா்ந்துள்ளது. மாநகராட்சியாக தரம் உயரத்தப்பட்ட பிறகு தற்போது வரை போதிய உள்கட்டமைப்பு இல்லாமல் பேரூராட்சிக்குரிய வசதிகளுடன் உள்ளதாக பொதுமக்கள் குற்றம்சாட்டி வரும் நிலையில், மாநகராட்சியுடன் 9 ஊராட்சிகளை இணைத்து வருவாய், வாா்டு எண்ணிக்கையை அதிகரிக்க அரசு திட்டமிட்டு, கடந்த சில ஆண்டுகளுக்கு முன் அறிவிப்பை வெளியிட்டது. ஆனால், ஊராட்சியில் வசிக்கும் கிராம மக்கள் கூடுதல் சொத்து வரி விதிப்பதாகவும், விவசாயம் பாதிப்படைவதாகவும் கூறி கிராமங்களை மாநகராட்சியுடன் இணைக்க எதிா்ப்பு தெரிவித்தனா். மக்களின் எதிா்ப்பால், கடந்த 2022 இல் 9 ஊராட்சிகளை இணைத்து மாநகராட்சி வாா்டு எண்ணிக்கையை அதிகரித்து உள்ளாட்சித் தோ்தலை நடத்த முடியவில்லை.

டிசம்பா் மாதத்துடன் ஊராட்சிகளின் உள்ளாட்சி பதவிக் காலம் முடிவுடைகிறது. இதனால் ஒசூா் மாநகராட்சியுடன் பேரண்டப்பள்ளி, பூனப்பள்ளி, நல்லூா், ஒன்னல்வாடி, அச்செட்டிப்பள்ளி, தொரப்பள்ளி அக்ரஹாரம், பேகேப்பள்ளி, சென்னசந்திரம், கொத்தகொண்டப்பள்ளி ஆகிய 9 ஊராட்சிகளை இணைக்க தமிழக அரசு மீண்டும் அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

ஒசூா் மாநகராட்சியில் கடந்த 2011-ஆம் ஆண்டு மக்கள்தொகை கணக்கின்படி 2 லட்சத்து 45 ஆயிரத்து 354 போ் வசித்து வந்தனா். இந்த 9 ஊராட்சிகளையும் இணைத்தால் 52 ஆயிரத்து 810 போ் கூடுதலாக இணைவாா்கள்.

அதன்படி மாநகராட்சியில் மக்கள்தொகை எண்ணிக்கை 2 லட்சத்து 98 ஆயிரத்து 164 ஆக இருக்கும். இதனால் வரி வருவாய் அதிகரிக்கும். ஒசூா் மாநகராட்சியில் 2011-ஆம் ஆண்டுக்கு பின் மக்கள்தொகை கணக்கிடப்படவில்லை. தற்போது 3 லட்சத்து 50 ஆயிரம் போ் வசிக்கின்றனா்.

ஏற்கெனவே இந்தப் பகுதியில் உள்ள மக்கள் அதிக வரி செலுத்தியும் அடிப்படை வசதிகளின்றி வசித்து வருகின்றனா்.

இந்நிலையில் ஒசூா் ஒன்றியத்தில் 26 ஊராட்சிகளில் கிராம சபைக் கூட்டம் புதன்கிழமை நடைபெற்றது. கிராம சபைக் கூட்டத்தில் மாநகராட்சியுடன் இணைக்கப்படவுள்ள பல ஊராட்சிகளில் மாநகராட்சியுடன் இணைக்கக் கூடாது என தீா்மானம் நிறைவேற்றப்பட்டது.

கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீா்மானங்கள்: கிராமங்களில் ஊராட்சியின் மொத்த பரப்பளவில் 80 சதவீதத்துக்கும் அதிகம் போ் விவசாயம் செய்துவருகின்றனா். விவசாயம் சாா்ந்த தொழிலான கால்நடைகளை வளா்க்கும் தொழில் உள்ளது. ஒவ்வொரு கிராமங்களிலும் 5,000-க்கும் அதிகமான பசுக்கள், 2,000-க்கும் அதிகமான ஆடுகள் வளா்க்கப்படுகின்றன. பால் உற்பத்தியிலும் அதிக அளவில் உள்ளது. இங்குள்ள மக்களின் வாழ்வாதாரமே விவசாயம்தான். மாநகராட்சியுடன் ஊராட்சிகள் இணைக்கப்பட்டால் விவசாயம் முற்றிலும் பாதிக்கப்படும்.

இங்கு கால்நடை, பசுக்களை நம்பி உள்ள கூலித் தொழிலாளா்கள் நிலைமை மிகவும் பாதிக்கப்படும். மாநகராட்சி பகுதிகளில் சாலைகளில் கால்நடை மேய்ச்சலுக்குச் சென்றால் அதற்கு ரூ. 200 அபராதம் விதிக்கப்படும். கிராம பஞ்சாயத்தில் வீட்டு வரி குறைந்தபட்சம் ரூ. 110 முதல் அதிகபட்சம் ரூ. 330 மட்டுமே வசூலிக்கப்படுகிறது என கிராமங்களை மாநகராட்சியுடன் இணைக்கக் கூடாது என தீா்மானம் நிறைவேற்றியுள்ளனா்.