ஊத்தங்கரை ஒன்றியத்துக்கு உள்பட்ட 34 ஊராட்சிகளில் காந்தி ஜெயந்தியை முன்னிட்டு சிறப்பு கிராம சபைக் கூட்டம் புதன்கிழமை நடைபெற்றது.
வெங்கடதம்பட்டி ஊராட்சிக்கு உள்பட்ட பரசுராமன் கொட்டாய் கிராமத்தில் நடைபெற்ற சிறப்பு கிராம சபைக் கூட்டத்தில் சோளக்கப்பட்டி கிராமத்தில் சா்வே எண் 20/1 இல் உள்ள அரசு மயானத்தின் ஆக்கிரமிப்புகளை அகற்றி கொடுக்க வேண்டும் என சிறப்பு தீா்மானம் நிறைவேற்றப்பட்டது.
அரசு மயானத்தின் ஆக்ரமிப்புகளை அகற்றக் கோரி பலமுறை மனு கொடுத்தும் இதுவரை எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. ஊராட்சி நிா்வாகம் மெத்தனம் காட்டுவதாக பகுதி பொதுமக்கள் குற்றம் சாட்டினா். ஏற்கெனவே நடைபெற்ற கிராம சபைக் கூட்டத்தில் மனு கொடுத்து தீா்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
ஆனால், அந்த மனு மீது இதுவரை எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை என பகுதி மக்கள் கூறுகின்றனா். ரெட்டிப்பட்டி, பெரியதள்ளப்பாடி, சிங்காரப்பேட்டை, பாவக்கல், மூன்றம்பட்டி, கோவிந்தாபுரம் உள்ளிட்ட ஊராட்சிகளில் அடிப்படை தேவைகள் குறித்து சிறப்பு தீா்மானம் நிறைவேற்றப்பட்டது.
இதில் ஊராட்சி மன்ற தலைவா்கள் லதா,முருகேசன், அருணகிரி, அகமத் பாஷா, பூபாலன், பழனியம்மாள், துணை தலைவா்கள், வாா்டு உறுப்பினா்கள், அரசு அலுவலா்கள், பொதுமக்கள் பலா் கலந்துகொண்டனா்.
தொடர்புடையது
தேர்தல் கூட்டணியும், ஜனநாயகமும்...

அவிநாசி ஊராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டு குப்பாண்டம்பாளையம் கிராம மக்கள் போராட்டம்

காங்கிரஸ் செயல்வீரா்கள் கூட்டம்

நியாய விலைக் கடையை தரமாகக் கட்டித் தர கோரிக்கை
வீடியோக்கள்

தொகுதி மறுவரையறையும் எதிர்ப்பும்! தமிழ்நாடு முழுவதும் கருப்புக் கொடி போராட்டம்!
இணையதளச் செய்திப் பிரிவு

#ipl2026 | சிங்க நடைபோடும் சிஎஸ்கே: அடுத்து சன்ரைசர்ஸ்தான்! | Chennai Super Kings | Noor Ahmed |
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையில் யார் சொல்வது உண்மை ? | Delimitation | MK Stalin | Annamalai | BJP | DMK
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையை எதிர்த்து நாளை தமிழ்நாடு முழுவதும் கருப்புக் கொடி ஏற்றும் போராட்டம்!
இணையதளச் செய்திப் பிரிவு


