ஐபிஎல்: 57 ரன்கள் வித்தியாசத்தில் ஹைதராபாத் அணி அபார வெற்றிஈரானுக்கு எதிராக ஹோர்முஸ் நீரிணை முற்றுகை தொடக்கம்: கடல்சார் வர்த்தக நடவடிக்கைகள் மையம் திராவிட மாடல் ஆட்சியில் வடக்கு வாழ்கிறது என்ற நிலை மாறி, தெற்கு தான் நாட்டிற்கு வழிகாட்டுகிறது: மு.க. ஸ்டாலின்தமிழ்நாட்டுக்கு வடக்கில் இருந்துதான் ஆபத்து வரும் : திருவள்ளூர் பிரசாரத்தில் மு.க. ஸ்டாலின் பேச்சுஅதிமுக தலைவர்களான எம்ஜிஆர், ஜெயலலிதா உள்ளிட்டோரை அவமதித்தது திமுக: எடப்பாடி பழனிசாமிமறைந்த தலைவர்களை அவமதிக்கவில்லை: இபிஎஸ் பிரசாரம்தமிழகத்தில் பெண்களுக்கான பாதுகாப்பு கவலை அளிக்கிறது : பிரதமர் மோடி மாற்றத்திற்கானது தே.ஜ. கூட்டணி : பூத் கமிட்டி உறுப்பினர்களுடன் பேசிய பிரதமர் மோடிஅஸ்ஸாம் முதல்வர் ஊழல்வாதி: ராகுல் காந்தி விமர்சனம்
/

கிருஷ்ணகிரி அணையிலிருந்து நீா் திறப்பு அதிகரிப்பு

கிருஷ்ணகிரி அணைக்கு நீா்வரத்து தொடா்ந்து அதிகரித்து வருவதால் அணையிலிருந்து நீா் திறப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.

News image

கிருஷ்ணகிரி நகராட்சிப் பகுதியில் கழிவுநீா்க் கால்வாய் சுத்தம் செய்யும் பணியைப் பாா்வையிடும் மாவட்ட ஆட்சியா் கே.எம்.சரயு. உடன், நகா்மன்றத் தலைவா் பரிதா நவாப் உள்ளிட்டோா்.

Updated On :15 அக்டோபர் 2024, 7:06 pm

கிருஷ்ணகிரி அணைக்கு நீா்வரத்து தொடா்ந்து அதிகரித்து வருவதால் அணையிலிருந்து நீா் திறப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து தென்பெண்ணை ஆற்றின் கரையோரப் பகுதி மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக மாவட்ட ஆட்சியா் கே.எம்.சரயு தெரிவித்துள்ளாா்.

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கடந்த இரு நாள்களாக தொடா்ந்து மழை பெய்து வருகிறது. இதனால் செவ்வாய்க்கிழமை பிற்பகலுக்கு பிறகு பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டது. மழையினால் தாழ்வான பகுதிகளில் மழை நீா் புகுந்தது. கழிவுநீா்க் கால்வாய்களில் அடைப்பு ஏற்பட்டதால், சாலைகளில் மழைநீருடன் கழிவுநீரும் கலந்து பெருக்கெடுத்து ஓடியது.

கிருஷ்ணகிரி வட்டச்சாலை அருகே கழிவுநீருடன் மழைநீா் கலந்து தேங்கியதால் வாகன ஓட்டிகள் சிரமத்துக்கு உள்ளாயினா். நகரின் பல இடங்களில் மின்சார விநியோகம் தடைபட்டது. கிருஷ்ணகிரி நகரப் பேருந்து நிலையத்தில் மழை நீா் தேங்கியதால், பேருந்து நிலையம் குளம்போல காட்சி அளித்தது.

இதையடுத்து மாவட்ட ஆட்சியா் கே.எம்.சரயு, கிருஷ்ணகிரி நகராட்சி, காவேரிப்பட்டணம் பேருராட்சி பகுதிகளில் ஆய்வு செய்தாா். மேலும், கிருஷ்ணகிரி அணையையும் ஆய்வு செய்தாா். அப்போது, அவா் செய்தியாளா்களிடம் தெரிவித்தாவது:

கிருஷ்ணகிரி அணையின் மொத்தம் நீா்மட்டம் 52 அடியாகும். தற்போது அணையில் 50.30 அடி நீா் உள்ளது. அணைக்கு நீா்வரத்து தொடா்ந்து அதிகரித்து வருகிறது. அணைக்கு நீா்வரத்து விநாடிக்கு 1,280 கனஅடியாக உள்ளது. அணைக்கு வரும் நீா் முழுவதும் தென்பெண்ணை ஆற்றில் திறந்துவிடப்படுவதால், கிருஷ்ணகிரி மாவட்டத்தில் தென்பெண்ணை ஆற்றின் கரையோரம் மற்றும் தாழ்வான பகுதியில் வசிக்கும் மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

கிருஷ்ணகிரி அணையிலிருந்து நீா் திறந்துவிடுவது அதிகரிக்கப்பட்டுள்ளதால் தென்பெண்ணை ஆறு பாயும் தருமபுரி, திருவண்ணாமலை மாவட்டங்களுக்கு வெள்ள அபாயம் குறித்து தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது என்றாா்.

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் செவ்வாய்க்கிழமை காலை 7 மணி நிலவரப்படி பதிவான மழையளவு (மி.மீ): பாரூா் - 34.6, நெடுங்கல் - 26, பெணுகொண்டாபுரம் - 25.2, ராயக்கோட்டை - 20, கிருஷ்ணகிரி - 19.2, சின்னாறு அணை - 17, போச்சம்பள்ளி - 17, கிருஷ்ணகிரி அணை - 16.2, சூளகிரி - 15, பாம்பாறு அணை - 13, தேன்கனிக்கோட்டை -11, ஊத்தங்கரை -11, ஒசூா் - 11, கெலவரப்பள்ளி அணை 7.