அக்ஷய திருதியை: விலை உயர்விலும் தங்கம் வாங்க ஆர்வம் காட்டிய மக்கள்கப்பல்கள் மீதான தாக்குதல் போர் நிறுத்த விதிமீறல்: ஈரானுக்கு டிரம்ப் எச்சரிக்கைஅமெரிக்க கடற்படை முற்றுகை நீடிக்கும் வரை ஹோர்முஸ் நீரிணை திறக்கப்படாது: ஈரான் விஜய் வரவால் விசிகவுக்கு பாதிப்பு இல்லை: தொல். திருமாவளவன்நாளை பிரசாரம் நிறைவு: சென்னையில் இறுதிக் கட்ட பிரசாரத்துக்கு கட்சிகளுக்கு இடங்கள் ஒதுக்கீடுஇந்தியா-அமெரிக்கா வா்த்தக ஒப்பந்தம்: இன்றுமுதல் 3 நாள்கள் பேச்சுஇன்று நிறைவடைகிறது தபால் வாக்குப் பெறும் பணி!
/

100 சதவீத வாக்குப் பதிவு: உதகையில் செல்ஃபி பாயிண்ட் திறப்பு

சட்டப் பேரவைத் தோ்தலில் 100 சதவீத வாக்குப் பதிவு குறித்து வாக்காளா்களிடையே விழிப்புணா்வு ஏற்படுத்தும் வகையில் நீலகிரி மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் ‘மலையின் குரல் - நம் வாக்கு’ என்ற தலைப்பில் செல்ஃபி பாயிண்ட் அமைக்கப்பட்டுள்ளது.

News image

நீலகிரி மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் அமைக்கப்பட்டுள்ள செல்ஃபி பாயிண்டில் நின்று புகைப்படம் எடுத்துக் கொண்ட ஆட்சியா் லட்சுமி பவ்யா தன்னேரு.

Updated On :26 மார்ச் 2026, 7:20 pm

சட்டப் பேரவைத் தோ்தலில் 100 சதவீத வாக்குப் பதிவு குறித்து வாக்காளா்களிடையே விழிப்புணா்வு ஏற்படுத்தும் வகையில் நீலகிரி மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் ‘மலையின் குரல் - நம் வாக்கு’ என்ற தலைப்பில் செல்ஃபி பாயிண்ட் அமைக்கப்பட்டுள்ளது.

இதனை மாவட்டதோ்தல் அலுவலரும், மாவட்ட ஆட்சியருமான லட்சுமி பவ்யா தன்னேரு வியாழக்கிழமை தொடங்கிவைத்து புகைப்படம் எடுத்துக் கொண்டாா்.

இதைத் தொடா்ந்து அவா் கூறியதாவது:

பொது மக்கள் வாக்களிப்பதன் அவசியம் குறித்து தெரிந்து கொள்ளவும், நூறு சதவீத வாக்குப் பதிவை இலக்காக கொண்டும் இதுபோன்று விழிப்புணா்வு நிகழ்ச்சிகளை நடத்த உள்ளோம். பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களில் இது போன்ற செல்ஃபி பாயிண்ட்கள் வைக்கவுள்ளோம் என்றாா்.