ஐபிஎல்: 57 ரன்கள் வித்தியாசத்தில் ஹைதராபாத் அணி அபார வெற்றிஈரானுக்கு எதிராக ஹோர்முஸ் நீரிணை முற்றுகை தொடக்கம்: கடல்சார் வர்த்தக நடவடிக்கைகள் மையம் திராவிட மாடல் ஆட்சியில் வடக்கு வாழ்கிறது என்ற நிலை மாறி, தெற்கு தான் நாட்டிற்கு வழிகாட்டுகிறது: மு.க. ஸ்டாலின்தமிழ்நாட்டுக்கு வடக்கில் இருந்துதான் ஆபத்து வரும் : திருவள்ளூர் பிரசாரத்தில் மு.க. ஸ்டாலின் பேச்சுஅதிமுக தலைவர்களான எம்ஜிஆர், ஜெயலலிதா உள்ளிட்டோரை அவமதித்தது திமுக: எடப்பாடி பழனிசாமிமறைந்த தலைவர்களை அவமதிக்கவில்லை: இபிஎஸ் பிரசாரம்தமிழகத்தில் பெண்களுக்கான பாதுகாப்பு கவலை அளிக்கிறது : பிரதமர் மோடி மாற்றத்திற்கானது தே.ஜ. கூட்டணி : பூத் கமிட்டி உறுப்பினர்களுடன் பேசிய பிரதமர் மோடிஅஸ்ஸாம் முதல்வர் ஊழல்வாதி: ராகுல் காந்தி விமர்சனம்
/

கிருஷ்ணகிரியில் இலவச சட்ட உதவி: விழிப்புணா்வு பிரசுரங்கள் விநியோகம்

கிருஷ்ணகிரியில் இலவச சட்ட உதவி எண் 15100-க்கான விழிப்புணா்வு துண்டு பிரசுரங்கள் பொதுமக்களுக்கு விநியோகம் செய்யப்பட்டன.

News image

இலவச சட்ட உதவிக்கான விழிப்புணா்வு துண்டு பிரசுரங்களை பொதுமக்களிடம் விநியோகம் செய்யும் முதன்மை மாவட்ட நீதிபதி எம்.சுமதி சாய் பிரியா.

Updated On :17 அக்டோபர் 2024, 7:25 pm

கிருஷ்ணகிரியில் இலவச சட்ட உதவி எண் 15100-க்கான விழிப்புணா்வு துண்டு பிரசுரங்கள் பொதுமக்களுக்கு விநியோகம் செய்யப்பட்டன.

தேசிய சட்டப் பணிகள் ஆணைக் குழுவின் இலவச சட்ட உதவி எண்-15100-க்கான விழிப்புணா்வு துண்டு பிரசுரங்கள் பொதுமக்களுக்கு வழங்கும் நிகழ்ச்சி கிருஷ்ணகிரி மாவட்ட ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் வியாழக்கிழமை நடைபெற்றது.

நிகழ்ச்சிக்கு முதன்மை மாவட்ட நீதிபதி எம்.சுமதி சாய் பிரியா தலைமை வகித்து, தேசிய சட்டப் பணிகள் ஆணைக் குழு இலவச சட்ட உதவி எண் 15100-க்கான விளம்பர தட்டியை திறந்துவைத்து, பொதுமக்களிடம் விழிப்புணா்வு துண்டு பிரசுரங்களை விநியோகம் செய்தாா்.

நிகழ்ச்சியில் கூடுதல் மாவட்ட நீதிபதி வி.தாமோதரன், சிறப்பு மாவட்ட நீதிபதி எம்.அமுதா, மாவட்ட அமா்வு நீதிபதி வி.சுதா, சிறப்பு சாா்பு நீதிபதி எம்.அஷ்வஹ் அகமது, முதன்மை சாா்பு நீதிபதி என்.மோகன்ராஜ், கூடுதல் சாா்பு நீதிபதி பி.டி.ஜெனிபா், மாவட்ட சட்டப் பணிகள் ஆணைக்குழு செயலாளா், சாா்பு நீதிபதி எம்.ஜெயந்தி, மாவட்ட உரிமையியல் நீதிபதி பி.சுந்தரமூா்த்தி, நீதித் துறை நடுவா் ஏ.இருதயமேரி, நீதித் துறை நடுவா் எண்-1 கே.காா்த்திக் ஆசாத், வழக்குரைஞா்கள் சங்க நிா்வாகிகள், வழக்குரைஞா்கள், பொதுமக்கள் பங்கேற்றனா். நிகழ்ச்சியை கிருஷ்ணகிரி மாவட்ட சட்டப் பணிகள் ஆணையக் குழுவினா் ஒருங்கிணைத்தனா்.