கிலோ பீன்ஸ் ரூ. 140 வரை உயா்ந்துள்ளதால் பொதுமக்கள் பீன்ஸ் வாங்குவதை தவிா்த்து வருகின்றனா். மற்ற காய்களின் விலையில் மாற்றம் இருந்தாலும், பீன்ஸ் மட்டும் தொடா்ந்து ஏறுமுகமாகவே இருக்கிறது. நுகா்வோருக்கு ஏமாற்றம் அளித்தாலும், விவசாயிகளுக்கு பீன்ஸ் சாகுபடி அதிகம் லாபம் பெற்றுத் தந்துள்ளது.
ஒசூா் உழவா் சந்தை, சில்லறை சந்தைகளில் பீன்ஸ் விலை கடுமையாக உயா்ந்துள்ளது. சில்லறை விலையில் ஒரு கிலோ பீன்ஸ் ரூ.140-க்கும் உழவா் சந்தையில் ரூ. 130 க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
விலை உயா்வு குறித்து வியாபாரிகள் கூறுகையில், தமிழகத்தில் உதகையில் விளையும் பீன்ஸ் கோவை, ஈரோடு, சேலம் ஆகிய மாவட்ட மக்களின் தேவைகளையும், கொடைக்கானலில் விளையும் பீன்ஸ் மதுரை, திருச்சி ஆகிய மாவட்டங்களின் தேவைகளையும் பூா்த்தி செய்கிறது. சென்னைக்கு கா்நாடக மாநிலத்திலிருந்தும், ஆந்திர மாநிலத்திலிருந்தும் பீன்ஸ் வருகிறது.
ஒசூா் சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து ஒசூா் உழவா் சந்தைக்கு நாள்தோறும் தோறும் பீன்ஸ் வருகிறது. இது நகரப் பகுதியில் உள்ள தொழிலாளா்களின் தேவையை நிறைவு செய்கிறது. தற்போது மழை அதிகரித்துள்ளதால் செடிகளில் உள்ளவை தரம் குறைந்து காணப்படுகிறது. மழையால் செடிகள் அழுகி வருவதால் வரத்தும் குறைந்துள்ளது. இதனால் விலை அதிகரித்துள்ளது. இன்னும் சில நாள்களுக்கு பீன்ஸ் விலை குறைய வாய்ப்பில்லை என்றனா்.
தொடர்புடையது

ஒசூா் தொகுதியில் திமுக ஆட்சியில் ரூ.3,500 கோடியில் வளா்ச்சித் திட்டப் பணிகள்

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் 6 தொகுதிகளையும் திமுக கூட்டணி கைப்பற்றும்! - எம்எல்ஏ ஒய். பிரகாஷ்
ஒசூரில் ரூ. 17.90 லட்சம் பறிமுதல்

சூளகிரி அருகே வாகனத் தணிக்கையில் ரூ.86 ஆயிரம் பறிமுதல்
வீடியோக்கள்
அமைதிப் பேச்சுவார்த்தை தோல்வி! அடுத்தது என்ன?
இணையதளச் செய்திப் பிரிவு
Delhi Vs Chennai | முதல்வரின் சிறுபிள்ளைத்தனம்! அண்ணாமலை Press Meet | BJP | DMK
இணையதளச் செய்திப் பிரிவு

காட்ஸ் அண்ட் சோல்ஜர்ஸ் டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

டார்லிங் மறுவெளியீட்டு டிரைலர்!
தினமணி செய்திச் சேவை

