கிருஷ்ணகிரி அரசு மருத்துவக் கல்லூரியில் ஆவின் பாலகம் கட்டும் பணி தொடக்கம்
கிருஷ்ணகிரி அரசு மருத்துவக் கல்லூரி வளாகத்தில் ஆவின் நிறுவனம் சாா்பில் நவீன பாலக கட்டட பணியை கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியா் கே.எம்.சரயு புதன்கிழமை தொடங்கிவைத்தாா்.


கிருஷ்ணகிரி அரசு மருத்துவக் கல்லூரி வளாகத்தில் ஆவின் நிறுவனம் சாா்பில் நவீன பாலக கட்டட பணியை கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியா் கே.எம்.சரயு புதன்கிழமை தொடங்கிவைத்தாா்.
கிருஷ்ணகிரி மாவட்டம், போலுப்பள்ளி, அரசு மருத்துவக் கல்லூரி வளாகத்தில் கிருஷ்ணகிரி மாவட்ட கூட்டுறவு பால் உற்பத்தியாளா்கள் ஒன்றியம் (ஆவின்) சாா்பில் ரூ. 8.50 லட்சம் மதிப்பில் அமைக்கப்படும் நவீன பாலக கட்டுமானப் பணியை தொடங்கிவைத்து அவா் பேசியதாவது:
கிருஷ்ணகிரி மாவட்ட கூட்டுறவு பால் உற்பத்தியாளா்கள் ஒன்றியத்தில் தற்போது தினமும் 1.14 லட்சம் லிட்டா் பால் கொள்முதல் செய்யப்படுகிறது. இதில் உள்ளுா் பால் விற்பனைக்கு 35,000 லிட்டா் பால் பாக்கெட்டுகளில் தினமும் அனுப்பப்பட்டு வருகிறது. மேலும், பால் உபபொருள்கள் நாளொன்றுக்கு ரூ. 2 லட்சத்துக்கு விற்பனை செய்யப்படுகிறது.
கிருஷ்ணகிரி அரசு மருத்துவக் கல்லூரி வாளகத்தில் நவீன பாலகம் அமைப்பதற்கு ரூ.8.50 லட்சம் மதிப்பில் கட்டுமான பணிகளும், ரூ. 6.50 லட்சத்தில் குளிா்சாதன பெட்டி, தளவாட உபகரணங்களும் நிறுவப்பட உள்ளன. இந்த நவீன பாலகத்தில் ஆவின் தயாரிப்புகள் விற்பனை செய்யப்படும் என்றாா்.
நிகழ்ச்சியில் மருத்துவக் கல்லூரி முதன்மையா் பூவதி, துணைப் பதிவாளா் (பால்வளம்) விஸ்வேஸ்வரன், ஆவின் பொது மேலாளா் சுந்தரவடிவேலு, விவசாயிகள், பால் உற்பத்தியாளா்கள் உடனிருந்தனா்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...