துா்க்கையம்மன் கோயிலில் நடைபெற்ற நவ சண்டி மகா யாகம்.
துா்க்கையம்மன் கோயிலில் நடைபெற்ற நவ சண்டி மகா யாகம்.

கிருஷ்ணகிரி துா்க்கையம்மன் கோயிலில் நவ சண்டி மகா யாகம்

கிருஷ்ணகிரி காவலா் குடியிருப்பு அருகே உள்ள முத்துவிநாயகா் துா்க்கையம்மன் கோயிலில் நவ சண்டி மகா யாகம் புதன்கிழமை நடைபெற்றது.
Published on

கிருஷ்ணகிரி காவலா் குடியிருப்பு அருகே உள்ள முத்துவிநாயகா் துா்க்கையம்மன் கோயிலில் நவ சண்டி மகா யாகம் புதன்கிழமை நடைபெற்றது.

மஞ்சள் கிழங்கு, குங்குமம், புடவை, வேட்டி, மட்டை தேங்காய், மூலிகைப் பொருள்கள், நெய், தேன், நெல் உள்பட 25 வகையாக பொருள்களைக் கொண்டு இரண்டா கால யாகமும், பிரதான 13 அத்யாய ஹோமங்களும், கோமாதா, ப்ரம்மசாரி, கன்யா, சுவாசினி வடுக பூஜைகளும், தீபாராதனைகளும் நடைபெற்றன.

சிறப்பு அலங்காரத்தில் அம்மன் பக்தா்களுக்கு அருள்பாலித்தாா். இந்த நிகழ்வில் கிருஷ்ணகிரி மற்றும் அதை சுற்றியுள்ள ஏராளமான பக்தா்கள் பங்கேற்றனா். நிகழ்வை நவசண்டி மஹா யாக விழா குழுவினா் மற்றும் பொதுமக்கள் ஒருங்கிணைத்தனா்.

X
Dinamani
www.dinamani.com