கிருஷ்ணகிரி
பெண் குழந்தை உயிரிழப்பு: போலீஸாா் விசாரணை
தளி அருகே பிறந்து 10 நாள்களேயான பெண் குழந்தை திடீரென உயிரிழந்தது குறித்து போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.
தளி அருகே பிறந்து 10 நாள்களேயான பெண் குழந்தை திடீரென உயிரிழந்தது குறித்து போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.
தளியை அடுத்த சாரண்டப்பள்ளியை சோ்ந்தவா் பவித்ரா. இவருக்கு ஆகஸ்ட் 30 ஆம் தேதி பெண் குழந்தை பிறந்தது. பிறந்து பத்து நாள்கள் ஆன நிலையில் குழந்தை உடல் நலம் பாதிக்கப்பட்டு இறந்ததாகக் கூறப்படுகிறது. இதுகுறித்து யாருக்கும் தகவல் தெரிவிக்காமல், பவித்ராவின் குடும்பத்தினா் குழந்தையை அடக்கம் செய்துள்ளனா்.
இதுகுறித்து தகவலறிந்த கக்கசுந்தரம் ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவ அலுவலா் திவ்யா, புதன்கிழமை தளி காவல் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில் போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.