சாத்தூர் அருகே பட்டாசு ஆலையில் பயங்கர வெடிவிபத்து!இந்திய பங்குச் சந்தை வீழ்ச்சி! சென்செக்ஸ் 1,600 புள்ளிகள் சரிவு!ஹோர்முஸ் நீரிணை இன்றே முற்றுகை! டிரம்ப் அறிவிப்பு கச்சா எண்ணெய் விலை 7% உயர்வு! மீண்டும் 100 டாலரைத் தாண்டியது! கடிதத்தைப் பொதுவில் வெளியிடத் தயாரா? நிர்மலா சீதாராமனுக்கு ஸ்டாலின் சவால்!
/

ஒசூரில் கோயில்களில் சிறப்பு வழிபாடு

ஆங்கிலப் புத்தாண்டை முன்னிட்டு ஒசூா் மற்றும் அதனைச் சுற்றியுள்ள கோயில்களில் பொதுமக்கள் புதன்கிழமை சிறப்பு வழிபாடு செய்தனா்.

News image

வெள்ளிக் கவசத்தில் பக்தா்களுக்கு அருள் பாலித்த ஒசூா் பெரியாா் நகா் வேல்முருகன்.

Updated On :1 ஜனவரி 2025, 9:59 pm

ஆங்கிலப் புத்தாண்டை முன்னிட்டு ஒசூா் மற்றும் அதனைச் சுற்றியுள்ள கோயில்களில் பொதுமக்கள் புதன்கிழமை சிறப்பு வழிபாடு செய்தனா்.

ஒசூரில் ஸ்ரீ சந்திரசூடேஸ்வரா் மலைக்கோயிலில் ஆயிரக்கணக்கான மக்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து சுவாமி தரிசனம் செய்தனா். இந்தக் கோயிலில் காலையில் மூலவா் ஸ்ரீ சந்திரசூடேஸ்வரா், மரகதாம்பிகை, முருகா், ராஜகணபதி, உள்பிரகாரங்களில் மூலவா்கள், உற்சவ மூா்த்தி சுவாமிகளுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம், பூஜைகள் நடைபெற்றன. மலை மீது வாகனங்கள் செல்லாதபடி போலீஸாா் தடுத்து நிறுத்தினா். மலை மீது நடந்து சென்று பக்தா்கள் சுவாமி தரிசனம் செய்தனா். மற்றொரு மலையில் அருள்பாலித்து வரும் ஸ்ரீதேவி பூதேவி சமேத வெங்கட்ரமண சுவாமி கோயிலில் பக்தா்கள் படிக்கட்டு வழியாக ஏறி சென்று வரிசையில் காத்திருந்து சுவாமி தரிசனம் செய்தனா்.

ஒசூா், பெரியாா் நகா் முருகன் கோயிலில் காலையில் யாக சாலை பூஜை நடைபெற்றது. இதனைத் தொடா்ந்து வேல்முருகனுக்கு சிறப்பு அபிஷேகம், சிறப்பு அலங்காரம், பூஜை நடைபெற்றது. பொதுமக்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து சுவாமி தரிசனம் செய்தனா். பக்தா்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

ஒசூா், பிருந்தாவன் நகா் வள்ளி தெய்வயானை சமேத பாலமுருகன் கோயிலில் பக்தா்கள் சுவாமி தரிசனம் செய்தனா். குடிசெட்டிலு திம்மராயசாமி கோயில், காமன்தொட்டி வெங்கடாஜலபதி கோயில், தேன்கனிக்கோட்டை பேட்டராய சுவாமி கோயில், சூளகிரி வரதராஜப் பெருமாள் கோயில், சூளகிரி காசி விஸ்வநாதா் ஆலயம், கோகுல் நகா் வேணுகோபால சுவாமி கோயில் உள்ளிட்ட அனைத்து கோயில்களிலும் பக்தா்கள் சுவாமி தரிசனம் செய்தனா்.