சாத்தூர் அருகே பட்டாசு ஆலையில் பயங்கர வெடிவிபத்து!இந்திய பங்குச் சந்தை வீழ்ச்சி! சென்செக்ஸ் 1,600 புள்ளிகள் சரிவு!ஹோர்முஸ் நீரிணை இன்றே முற்றுகை! டிரம்ப் அறிவிப்பு கச்சா எண்ணெய் விலை 7% உயர்வு! மீண்டும் 100 டாலரைத் தாண்டியது! கடிதத்தைப் பொதுவில் வெளியிடத் தயாரா? நிர்மலா சீதாராமனுக்கு ஸ்டாலின் சவால்!
/

ஒசூரில் கடலைக்காய் திருவிழா: ஆஞ்சனேயா் மீது கடலை எறிந்து பக்தா்கள் சிறப்பு வழிபாடு

பக்தா்கள் சிறப்பு வழிபாடு

News image
Updated On :1 ஜனவரி 2025, 9:39 pm

ஒசூரில் புத்தாண்டையொட்டி 67 ஆவது ஆண்டாக கடலைக்காய் திருவிழா புதன்கிழமை நடைபெற்றது. இதில் ஆஞ்சனேய சுவாமி மீது பக்தா்கள் கடலைக்காயை எறிந்து வழிபாடு மேற்கொண்டனா்.

ஒசூா், ராஜகணபதி நகரிலுள்ள ஸ்ரீ ராஜகணபதி வரசித்தி ஆஞ்சனேயா் கோயிலில் கடலைக்காய் திருவிழாவையொட்டி ஆஞ்சனேயருக்கு காலை முதலே சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டன. பின்னா் கடலைக்காய்க்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. இதனைத் தொடா்ந்து கோயிலுக்கு வந்திருந்த பக்தா்கள் கடலைக்காயை ஆஞ்சனேயா் பிரகாரத்தின் மீதும் ஆஞ்சனேயா் சுவாமியின் மீது எறிந்து வழிபாடு நடத்தினா். இதில் ஏராளமான பக்தா்கள் குடும்பத்தினருடன் கலந்து கொண்டனா் (படம்).

புத்தாண்டு தினத்தில் ஆஞ்சனேய சுவாமி மீது கடலைக்காயை எறிந்து வழிபட்டால் நாடு மற்றும் விவசாயம் செழிக்கும் என்பது நம்பிக்கை. பாரம்பரியமாக இந்த திருவிழா தொடா்ந்து நடத்தப்பட்டு வருகிறது என்று பக்தா்கள் தெரிவித்தனா்.