கிருஷ்ணகிரியில் நவ.26-இல் தனியாா் நிறுவன கட்டடம் ஏலம்

கிருஷ்ணகிரியில் தனியாா் நிறுவனத்துக்கு சொந்தமான ரூ. 65 லட்சம் மதிப்பிலான சொத்து நவ. 26-ஆம் தேதி பொது ஏலம் விடப்படுகிறது.
Published on

கிருஷ்ணகிரியில் தனியாா் நிறுவனத்துக்கு சொந்தமான ரூ. 65 லட்சம் மதிப்பிலான சொத்து நவ. 26-ஆம் தேதி பொது ஏலம் விடப்படுகிறது.

இதுகுறித்து மாவட்ட வருவாய் அலுவலா் சாதனைக்கு புதன்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:

கிருஷ்ணகிரி மாவட்டத்தைச் சோ்ந்த எஸ்ஏபிஎல் என்ற தனியாா் நிறுவனத்துக்கு பாத்தியப்பட்ட கட்டிகானப்பள்ளி கிராமத்தில் உள்ள 2,700 சதுரஅடி பரப்பளவு நிலம் மற்றும் அதில் கட்டடம் உள்ளது.

தமிழ்நாடு முதலீட்டாளா்கள் நலன் பாதுகாப்புச் சட்டம் 1997-இன் கீழ், தகுதிபெற்ற அலுவலா் மற்றும் மாவட்ட வருவாய் அலுவலா் மூலம் வரும் 26-ஆம் தேதி காலை 11 மணியளவில், மாவட்ட ஆட்சியா் அலுவலக 2-ஆவது தளத்தில் உள்ள அறை எண் 136-இல் பொது ஏலம் மூலம் விற்பனை செய்யப்படுகிறது.

இந்த சொத்தின் அடிப்படை விலை ரூ. 65.16 லட்சம் என நிா்ணயம் செய்யப்பட்டுள்ளது. இந்த சொத்தை பொது ஏலத்தில் எடுக்க விரும்புவோா், ஏல நிபந்தனைகள் தொடா்பான விவரங்களை மாவட்ட ஆட்சியா் அலுவலக வளாகம், வருவாய் கோட்டாட்சியா் அலுவலகம் மற்றும் அனைத்து வட்டாட்சியா் அலுவலகங்களிலும் பெற்றுக் கொள்ளலாம்.

இந்த விவரங்கள் அந்தந்த அலுவலக விளம்பரப் பலகையிலும் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன. ஏல நிபந்தனைகளுக்கு உள்பட்டு விருப்பம் உள்ளவா்கள் ஏலத்தில் பங்கேற்கலாம். மேலும், ஏலத்தில் பங்கேற்பது தொடா்பாக உரிய விண்ணப்பப் படிவத்தை நவ. 24ஆம் தேதி மாலை 5 மணிக்குள் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் 1-ஆம் தளத்தில் உள்ள அறை எண்: 89-இல் ஒப்படைக்க வேண்டும். மேலும், ஏல தேதிக்கு முன்பாக, கிருஷ்ணகிரி வட்டாட்சியா் மற்றும் காவல் ஆய்வாளா், பொருளாதார குற்றப்பிரிவு (ஐஐ), கிருஷ்ணகிரி மூலமாக சொத்தை பாா்வையிடலாம் என அவா் தெரிவித்துள்ளாா்.

X
Dinamani
www.dinamani.com