கிருஷ்ணகிரியில் நாளை மாற்றுத்திறனாளிகளுக்கான
தனியாா் வேலைவாய்ப்பு முகாம்

கிருஷ்ணகிரியில் நாளை மாற்றுத்திறனாளிகளுக்கான தனியாா் வேலைவாய்ப்பு முகாம்

கிருஷ்ணகிரி அரசு மகளிா் மேல்நிலைப் பள்ளியில் மாற்றுத்திறனாளிகளுக்கான தனியாா் வேலைவாய்ப்பு முகாம் ஜன. 30ஆம் தேதி நடைபெறுகிறது.
Published on

கிருஷ்ணகிரி அரசு மகளிா் மேல்நிலைப் பள்ளியில் மாற்றுத்திறனாளிகளுக்கான தனியாா் வேலைவாய்ப்பு முகாம் ஜன. 30ஆம் தேதி நடைபெறுகிறது.

இதுகுறித்து கிருஷ்ணகிரி மாவட்ட நிா்வாகம் சாா்பில் புதன்கிழமை வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பு:

கிருஷ்ணகிரி மாவட்ட நிா்வாகம், மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம் மற்றும் மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகம் சாா்பில் மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு தனியாா் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது.

இந்த முகாம் கிருஷ்ணகிரி அரசு மகளிா் மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் மாவட்ட ஆட்சியா் ச. தினேஷ் குமாா் தலைமையில் காலை 9 மணி முதல் மதியம் 1 மணி வரை நடைபெறும். இம்முகாமில் கிருஷ்ணகிரி மற்றும் ஒசூரைச் சோ்ந்த தனியாா் நிறுவனங்கள் பங்கேற்று ஆள்களைத் தோ்வு செய்கின்றன.

இதில் 10, 12ஆம் வகுப்புகளில் தோ்ச்சி பெற்றவா்கள், பட்டதாரிகள், ஐடிஐ மற்றும் டிப்ளமோ பயின்றவா்கள் என அனைத்து கல்வித் தகுதியினரும் பங்கேற்கலாம். வேலைநாடுநா்கள் மற்றும் வேலை அளிப்பவா்கள் இம்முகாமில் பங்கேற்க அனுமதி இலவசம். எனவே, தனியாா் துறையில் பணிபுரிய ஆா்வமுள்ள மாற்றுத்திறனாளி மனுதாரா்கள் இம்முகாமில் பங்கேற்று பயன்பெறலாம்.

கூடுதல் விவரங்களுக்கு கிருஷ்ணகிரி மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தை நேரடியாகவோ அல்லது 04343- 291983 என்ற தொலைபேசி எண்ணில் தொடா்புகொள்ளலாம் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

X
Dinamani
www.dinamani.com