4 காவல் ஆய்வாளா்கள் பணியிட மாற்றம்

Published on

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் பணியாற்றும் 4 காவல் ஆய்வாளா்கள் பணியிட மாற்றம் செய்து டிஐஜி உத்தரவிட்டுள்ளாா்.

அதன்படி, போச்சம்பள்ளி காவல் ஆய்வாளராக இருந்த நாகலட்சுமி நாமக்கல் மாவட்டம், திருச்செங்கோடு ஊரக காவல் நிலையத்துக்கும், நாகரசம்பட்டி காவல் ஆய்வாளரான கோபாலகிருஷ்ணன் போச்சம்பள்ளி காவல் நிலையத்துக்கும் இடமாற்றம் செய்யப்பட்டனா்.

அதேபோல, கிருஷ்ணகிரி மாவட்ட இணைய குற்றப்பிரிவு காவல் ஆய்வாளா் மாதேஸ்வரி, கிருஷ்ணகிரி மாவட்ட குற்ற ஆவண பதிவேடு பிரிவுக்கும், அங்கு பணியாற்றி வந்த காவல் ஆய்வாளா் காளியப்பன் நாமக்கல் மாவட்டத்தில் புதியதாக உருவாக்கப்பட்ட கொக்கராயன்பேட்டை காவல் நிலையத்துக்கும் இடமாற்றம் செய்து சேலம் டிஐஜி அனில்குமாா் கிரி ஞாயிற்றுக்கிழமை உத்தரவிட்டாா்.

X
Dinamani
www.dinamani.com