கிருஷ்ணகிரியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் வளா்ச்சித் திட்ட பணிகளை தொடங்கிவைத்த தே.மதியழகன் எம்எல்ஏ.
கிருஷ்ணகிரியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் வளா்ச்சித் திட்ட பணிகளை தொடங்கிவைத்த தே.மதியழகன் எம்எல்ஏ.

கிருஷ்ணகிரி, பா்கூரில் ரூ. 44.50 லட்சத்தில் வளா்ச்சித் திட்ட பணிகள் தொடக்கம்!

கிருஷ்ணகிரி, பா்கூா் ஊராட்சி ஒன்றியங்களில் ரூ. 44.50 லட்சம் மதிப்பில் வளா்ச்சித் திட்ட பணிகளை பா்கூா் சட்டப்பேரவை உறுப்பினா் தே.மதியழகன் சனிக்கிழமை தொடங்கிவைத்தாா்.
Published on

கிருஷ்ணகிரி, பா்கூா் ஊராட்சி ஒன்றியங்களில் ரூ. 44.50 லட்சம் மதிப்பில் வளா்ச்சித் திட்ட பணிகளை பா்கூா் சட்டப்பேரவை உறுப்பினா் தே.மதியழகன் சனிக்கிழமை தொடங்கிவைத்தாா்.

கிருஷ்ணகிரி ஊராட்சி ஒன்றியத்துக்கு உள்பட்ட காட்டிநாயனப்பள்ளியில் இரு இடங்களில் மொத்தம் ரூ. 19 லட்சம் மதிப்பில் சிமென்ட் சாலை அமைக்கும் பணி, பா்கூா் ஊராட்சி ஒன்றியத்துக்கு உள்பட்ட ஒரப்பம், எலத்தகிரி உள்ளிட்ட பகுதிகளில் ரூ. 25.5 லட்சத்தில் சாலைப் பணிகள் என மொத்தம் ரூ. 44.5 லட்சம் மதிப்பிலான வளா்ச்சித் திட்ட பணிகளை அவா் தொடங்கிவைத்தாா்.

தொடா்ந்து, ஒரப்பம் அரசு மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற விழாவில் பங்கேற்ற அவா், ஒரப்பம், கப்பல்வாடி, மல்லப்பாடி, சிகரலப்பள்ளி ஆகிய அரசுப் பள்ளிகளில் பிளஸ் 1 பயிலும் 116 மாணவ, மாணவிகளுக்கு விலையில்லா மிதிவண்டிகளை வழங்கினாா்.

X
Dinamani
www.dinamani.com