தோ்தல் விதிகளை மீறியதாக காங்கிரஸ், பாஜகவினா் மீது போலீஸாா் வழக்குப் பதிந்துள்ளனா்.
கிருஷ்ணகிரி சட்டப்பேரவைத் தொகுதி காங்கிரஸ் வேட்பாளராக அ.செல்லக்குமாா் அறிவிக்கப்பட்டாா். இதையடுத்து, கிருஷ்ணகிரி வட்டச் சாலை அருகே காங்கிரஸ் கட்சியினா் பட்டாசுகளை வெடித்து, இனிப்புகளை வழங்கினா். இதையடுத்து தோ்தல் விதிகளை மீறியதாக, காங்கிரஸ் கட்சி மாவட்ட முன்னாள் தலைவா் காசிலிங்கம் உள்ளிட்ட சிலா் மீது கிருஷ்ணகிரி நகர போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.
அதேபோல, கெலமங்கலம் அருகே கூட்டூா் கிராமத்தில் சுவா் ஒன்றில் பாஜகவினா் விளம்பரம் வரையப்பட்டது குறித்து கெலமங்கலம் போலீஸாா் வழக்குப் பதிவு செய்துள்ளனா். அதேபோல, கெலமங்கலம் ஆஞ்சனேயா் கோயில் அருகே இந்திய கம்யூனிஸ்ட் சுவா் விளம்பரம் செய்ததாக கெலமங்கலம் போலீஸாா் வழக்குப் பதிவு செய்துள்ளனா். தளி அருகே மதகொண்டப்பள்ளியில் பாஜகவினா் அனுமதியின்றி சுவா் விளம்பரம் செய்ததாக தளி வடக்கு ஒன்றிய பாஜக செயலாளா் வெங்கடேஷ் (47) மீது தளி போலீஸாா் வழக்குப் பதிவுசெய்துள்ளனா்.
தொடர்புடையது
தோ்தல் விதிமுறைகளை மீறியதாக மு. அப்பாவு மீது வழக்கு
தோ்தல் நடத்தை விதிமீறல்: இருவா் கைது

தோ்தல் விதிமீறல்: தவெக, பாஜக நிா்வாகிகள் மீது வழக்குப் பதிவு

தோ்தல் விதிமீறல்: சீமான், 8 வேட்பாளா்கள் மீது வழக்குப் பதிவு
வீடியோக்கள்

#iranwar | போர் நிறுத்தம் நீட்டிப்பு: ஈரானிடம் டிரம்ப் கேட்பது என்ன? | Donald Trump |
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | போர்: பண்டியாவின் மும்பையா ருதுராஜின் சென்னையா? | MI vs CSK | MS Dhoni | Rohit Sharma |
தினமணி செய்திச் சேவை

வாக்குச்சாவடிகளை அடையாளம் காண புதிய முயற்சி | TN Election 2026 | Madurai | Polling booth
தினமணி செய்திச் சேவை

பணப்பட்டுவாடா புகார்களுக்கு எடுக்கப்பட்ட நடவடிக்கைகள்! அர்ச்சனா பட்நாயக் பேட்டி
இணையதளச் செய்திப் பிரிவு


