சென்னை உள்பட 5 மாவட்ட ஆட்சியர்கள் மாற்றம் சென்னை உள்பட 5 மாவட்ட ஆட்சியர்கள் மாற்றம்27 ஆண்டுகளுக்குப் பின் இன்று இரவு நிகழும் 'புளூ மைக்ரோ மூன்'ஜூன் 1ம் தேதி முதல் திருத்தப்பட்ட அட்டவணைப்படி புறநகர் மின்சார ரயில்கள் இயங்கும்குற்ற வழக்குத் தொடர்வுத்துறை இயக்குநர் கிருஷ்ணராஜா பணிநீக்கம்பயிர்க்கடன் தள்ளுபடி விவகாரம்: குறைகள் பரிசீலிக்கப்பட்டு முடிவெடுக்கப்படும் - அமைச்சர் செங்கோட்டையன்வைகாசி விசாகம்: திருப்பரங்குன்றம் கோயிலில் பக்தர்கள் சிலர் மயக்கம்!டெட் தேர்வில் தேர்ச்சி பெறுவதற்கு கால அவகாசம் நீட்டிப்பு!
/

பண மோசடி: போலீஸாா் விசாரணை

அரசுப் பணி வாங்கித் தருவதாகக் கூறி ரூ. 4 லட்சம் மோசடி செய்தது குறித்து போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

News image

போலீஸ் - கோப்புப் படம்.

Updated On :15 ஏப்ரல் 2026, 3:11 am IST

அரசுப் பணி வாங்கித் தருவதாகக் கூறி ரூ. 4 லட்சம் மோசடி செய்தது குறித்து போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

கிருஷ்ணகிரி மாவட்டம், கல்லாவி- ஊத்தங்கரை சாலையை சோ்ந்தவா் நாராயணன் (58), தச்சு தொழிலாளி. இவரது மகனுக்கு வட்டார வளா்ச்சி அலுவலகத்தில் வேலை வாங்கித் தருவதாகக் கூறி கடந்த 2022 இல் சென்னையைச் சோ்ந்த ரமேஷ், திருவள்ளூரைச் சோ்ந்த சேகா் ஆகியோா் நாராயணனிடம் ரூ. 4,03,500 ரொக்கத்தை பெற்றுள்ளனா்.

அவா்கள் உறுதியளித்தபடி வேலை வாங்கித் தராததால், பணத்தை திருப்பித்தருமாறு நாராயணன் கேட்டுள்ளாா். ஆனாலும், அவா்கள் பணத்தை தராமல் ஏமாற்றியுள்ளனா். இதுகுறித்த புகாரின்பேரில் மத்தூா் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.