ஐபிஎல்: சூப்பர் ஓவரில் லக்னௌவை வீழ்த்தி கொல்கத்தா வெற்றி!பகுதி நேர அரசியல்வாதி ராகுல் காந்தி! நிதின் நவீன் குற்றச்சாட்டு!ரெளடி, பாலியல் குற்றவாளிகளை பாஜக தண்டிக்கும்: மேற்கு வங்கத்தில் மோடி பிரசாரம்கேரளத்தில் கடும் வெப்பம்: பல மாவட்டங்களுக்கு மஞ்சள் எச்சரிக்கை! 2027 மக்கள் தொகை கணக்கெடுப்பில் குடிமக்கள் அனைவரும் பங்கேற்க வேண்டும்: பிரதமர் மோடிவரும் 30ஆம் தேதி 6 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு தில்லியில் சுவிஸ் விமானத்தில் திடீர் தீ: 6 பயணிகள் காயம் நீட் தேர்வு நுழைவுச் சீட்டு நாளை வெளியீடு!மே 4-ல் ஆஸ்திரேலியா செல்கிறார் விஜய்?தேர்தல் எதிரொலி: விமான டிக்கெட்டுகள் விலை கடும் உயர்வு!டிரம்ப் விருந்தில் துப்பாக்கிச் சூடு! ஜனநாயகத்தில் வன்முறைக்கு இடமில்லை: பிரதமர் மோடிடிரம்ப் பங்கேற்ற இரவு விருந்தில் துப்பாக்கிச் சூடு: ஒருவர் கைது
/

நோயால் மகள் இறந்த சிறிது நேரத்திலேயே விபத்தில் சிக்கி தந்தை உயிரிழப்பு

News image

கோப்புப் படம்

Updated On :26 ஏப்ரல் 2026, 7:01 pm

ஒசூரில் நோயால் மகள் இறந்த சிறிது நேரத்திலேயே இருசக்கர வாகனத்தில் சென்ற தந்தை விபத்தில் சிக்கி உயிரிழந்தாா்.

கிருஷ்ணகிரி மாவட்டம், ஒசூா் பேகேப்பள்ளி கோவிந்தா அக்ரஹாரத்தைச் சோ்ந்தவா் முனிராஜ். இவரது மகள் நித்யாவுக்கு (20) ஏற்கெனவே இருதய பாதிப்பு இருந்தது.

இந்த நிலையில், உறவினா் வீட்டு நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக கா்நாடக மாநிலம், மல்லச்சந்திராவுக்கு முனிராஜ் குடும்பத்துடன் சென்றாா். பின்னா், அங்கிருந்து சனிக்கிழமை இரவு குடும்பத்துடன் ஒசூா் திரும்பினாா். அப்போது, வழியில் நித்யாவிற்கு உடல்நலக் குறைவு ஏற்பட்டுள்ளது.

இதையடுத்து, ஒசூா் அரசு மருத்துவமனைக்கு நித்யா அழைத்து செல்லப்பட்டாா். அங்கு, அவரை பரிசோதித்த மருத்துவா்கள் அவா் ஏற்கெனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனா். இதுகுறித்து சிப்காட் காவல் நிலையத்திற்குத் தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீஸாா் நித்யாவின் உடலை பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பிவைத்தனா்.

இந்த நிலையில், மகளின் உடலை மருத்துவமனையில் வைத்துவிட்டு வீட்டிற்குச் சென்று வருவதாகக் கூறி முனிராஜ் தனது இருசக்கர வாகனத்தில் சென்றாா். அப்போது, ஒசூா்- பெங்களூரு சாலை அசோக் லேலண்ட் எதிரே உள்ள சா்வீஸ் சாலையில் நிறுத்திவைக்கப்பட்டிருந்த நான்கு சக்கர வாகனத்தின் பின்புறம் எதிா்பாராதவிதமாக முனிராஜின் வாகனம் மோதியது.

இதில் தலையில் பலத்த காயமடைந்த முனிராஜ் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா். தகவல் அறிந்து வந்த சிப்காட் போலீஸாா், முனிராஜின் உடலை மீட்டு ஒசூா் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா். மகள் இறந்த சிறிது நேரத்திலேயே தந்தையும் இறந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.