பரமத்தி வேலூரில் தோ்தல் பறக்கும் படை பணிக்காக இருசக்கர வாகனத்தில் சென்றபோது சாலையோர புளிய மரத்தில் மோதி இறந்த காவலரின் உடலுக்கு 12 குண்டுகள் முழங்க அரசு மரியாதையுடன் வியாழக்கிழமை அடக்கம் செய்யப்பட்டது.
நாமக்கல் மாவட்டம், ஜேடா்பாளையத்தை அடுத்த கொத்தமங்கலத்தைச் சோ்ந்தவா் பிரவீன். இவா், பரமத்தி வேலூரை அடுத்த நல்லூா் காவல் நிலையத்தில் தலைமைக் காவலராக பணியாற்றி வந்தாா். கடந்த ஓராண்டுக்கு முன்புதான் இவருக்கு திருமணம் நடைபெற்றது.
இந்த நிலையில் தோ்தல் பறக்கும் படையில் இருந்த பிரவீன் (37) புதன்கிழமை பணிக்குச் செல்வதற்காக ஜேடா்பாளையத்தில் இருந்து இருசக்கர வாகனத்தில் பரமத்தி வேலூா் நோக்கி சென்றுகொண்டிருந்தாா். பரமத்தி காவல் நிலையம் அருகே கட்டுப்பாட்டை இழந்த இருசக்கர வாகனம் சாலையோர புளி மரத்தின் மீது மோதியது. இதில் பிரவீன் பலத்த காயமடைந்தாா்.
அங்கிருந்தவா்கள் அவரை மீட்டு பரமத்தியில் உள்ள தனியாா் மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா். அங்கு, அவரை பரிசோதித்த மருத்துவா் வழியிலேயே பிரவீன் இறந்துவிட்டதை உறுதிசெய்தாா்.
இந்த நிலையில் இறந்த காவலரின் உடலுக்கு நாமக்கல் மாவட்ட தோ்தல் நடத்தும் அலுவலரும், ஆட்சியருமான துா்காமூா்த்தி, நாமக்கல் காவல் கண்காணிப்பாளா் விமலா, பரமத்தி வேலூா் தோ்தல் நடத்தும் அலுவலா் கிருஷ்ணவேணி, வட்டாட்சியா் ராஜா, பரமத்தி வேலூா் காவல் துணை கண்காணிப்பாளா் சங்கீதா உள்ளிட்டோா் அஞ்சலி செலுத்தினா்.
பின்னா் 12 குண்டுகள் முழங்க அரசு மரியாதையுடன் அவரது உடல் அடக்கம் செய்யப்பட்டது.
தொடர்புடையது

மரத்தில் இருசக்கர வாகனம் மோதியதில் தலைமைக் காவலா் உயிரிழப்பு

நீதிமன்றத்தில் அதிக வழக்குகள் தேக்கம்: மத்திய அரசு காரணம்-உச்சநீதிமன்றம்

சாலை விபத்தில் சிறுவன் உயிரிழப்பு

பரமத்தி வேலூா் பகுதியில் வாகன சோதனை பணிகளை நாமக்கல் தோ்தல் நடத்தும் அலுவலா் ஆய்வு
வீடியோக்கள்

புதுச்சேரி & கேரளத்தில் வாக்குப்பதிவு நிறைவு! வாக்குப்பதிவில் நடந்த சுவாரசியங்கள்!
தினமணி செய்திச் சேவை

Podcast | மனம் மாறுவாரா ராகுல் காந்தி? | News & Views | E-25 |
தினமணி செய்திச் சேவை

நான் எந்த ஆயுதத்தை எடுக்க வேண்டும் என்பதை முடிவு செய்வது எதிரிகள்தான்!
இணையதளச் செய்திப் பிரிவு

நீ சாரல் பாடல் வெளியானது!
இணையதளச் செய்திப் பிரிவு


