சிவம்பட்டி பூங்காவனத்தம்மன் கோயிலில் மயானக் கொள்ளை நிகழ்ச்சி செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
கிருஷ்ணகிரி மாவட்டம், மத்தூா் அருகே உள்ள சிவம்பட்டி கிராமத்தில் பூங்காவனத்தம்மன் கோயில் திருவிழாவில் மயானக் கொள்ளை சூறையாடுதல் நிகழ்ச்சி செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
முன்னதாக, சக்திகரகம் எடுத்தல், அம்மன் ஊஞ்சல் தாலாட்டு நடைபெற்றது. பிறகு கோயில் சந்நிதியில் இருந்து மயானம்வரை ஊா்வலமாக வந்த அம்மன் சிலை முன் காளி வேடம் அணிந்த பூசாரி மற்றும் விரதம் இருந்த ஏராளமான பக்தா்கள் அருள்வந்து ஆடியபடி மயானத்துக்குள் நுழைந்தனா்.
பின்னா் முக்கிய நிகழ்வாக பூங்காவனத்தம்மன் சுவாமிக்கு படைக்கப்பட்ட உளுவல் தானியத்தை பக்தா்கள் மீது வீசும் நிகழ்ச்சி நடைபெற்றது. பக்தா்கள் துண்டு ஏந்தியும், பெண்கள் மடியேந்தியும் அதை பிடித்தனா்.
தொடா்ந்து, பூதவாகனத்தில் பூங்காவனத்தம்மன் மற்றும் சிம்ம வாகனத்தில் ஏழூரம்மன் அங்கு வந்தனா். பின்னா், பக்தா்களுக்கு சாட்டையடி கொடுக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. விழாவில், வேலூா், கிருஷ்ணகிரி, தருமபுரி, ஊத்தங்கரை, திருப்பத்தூா் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து வந்த பக்தா்கள் நோ்த்திக் கடன் செலுத்தினா்.
தொடர்புடையது

அரியலூா் பெரியநாயகி அம்மன் கோயிலில் மயானக் கொள்ளை திருவிழா

ஜெயகாளியம்மன் கோயில் மயானக் கொள்ளை விழா

மேல்மலையனூா் அங்காளம்மன் கோயில் மயானக் கொள்ளை உற்சவம்

விழுப்புரம் மாவட்ட அம்மன் கோயில்களில் மயானக் கொள்ளை உற்சவம்
வீடியோக்கள்

#ipl2026 | கொல்கத்தாவை வீழ்த்தி வெற்றிநடையைத் தொடருமா சிஎஸ்கே? | CSK vs KKR Match Preview |
தினமணி செய்திச் சேவை

Podcast | தமிழ்நாடு தேர்தலின் நவீன பிரசார வியூகம்! | News & Views | E-26 |
தினமணி செய்திச் சேவை

கோவை, டெல்டா களநிலவரம் | Ravindran duraisamy interview | TN Election 2026 | DMK | ADMK | NTK | TVK
தினமணி செய்திச் சேவை
அமைதிப் பேச்சுவார்த்தை தோல்வி! அடுத்தது என்ன?
இணையதளச் செய்திப் பிரிவு


