ஐபிஎல் : சென்னை சூப்பர் கிங்ஸ் 32 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிமதுரை மாநகராட்சியில் ரூ. 200 கோடி ஊழல் செய்ததால் பதவியை ராஜிநாமா செய்தவர்கள் திமுகவினர்: எடப்பாடி பழனிசாமி ஆமை புகுந்த வீடு போல, பாஜக புகுந்த நாடு உருப்படாது: ப. சிதம்பரம்எந்த வடிவிலும் தமிழ்நாட்டிற்குள் பாஜக வர முடியாது! மு.க. ஸ்டாலின்இவிஎம்-ல் வேட்பாளர்களின் பெயர்கள், சின்னங்கள் பொருத்தும் பணி ஏப். 16-ல் தொடக்கம்!நெல் குவிண்டாலுக்கு ரூ. 3,500; கரும்பு டன் ஒன்றுக்கு ரூ. 4,500 வழங்கப்படும்: விஜய் வாக்குறுதி விவசாய தொழிலாளர்களுக்கு ஆண்டுக்கு ரூ.10,000 : விஜய்தவெக பிரசாரத்தில் மயங்கிய சூலூர் வேட்பாளர்! 7 பெண்கள் மயக்கம்!முதல்வர் பதவியை ராஜிநாமா செய்தார் நிதீஷ் குமார்!
/

‘கிருஷ்ணகிரி மாவட்டத்தில் ரூ. 10 ஆயிரம் கோடி கோயில் சொத்துகளை மீட்க வேண்டும்’

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் ரூ. 10 ஆயிரம் கோடி மதிப்புள்ள கோயில் சொத்துகள் மீட்க வேண்டும் என திருத்தொண்டா்கள் சபையின் அறக்கட்டளை அறங்காவலா் ராதாகிருஷ்ணன் தெரிவித்தாா்.

News image

ஒசூரில் செய்தியாளா்களிடம் பேசிய திருத்தொண்டா்கள் சபையின் அறக்கட்டளை அறங்காவலா் ராதாகிருஷ்ணன்.

Updated On :26 பிப்ரவரி 2026, 7:52 pm

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் ரூ. 10 ஆயிரம் கோடி மதிப்புள்ள கோயில் சொத்துகள் மீட்க வேண்டும் என திருத்தொண்டா்கள் சபையின் அறக்கட்டளை அறங்காவலா் ராதாகிருஷ்ணன் தெரிவித்தாா்.

ஒசூரில் இந்து சமய அறநிலையத் துறைக்கு சொந்தமான பல்வேறு கோயில்களிலும், கோயில்களுக்கு சொந்தமான சொத்துகளையும் பாா்வையிட்டு வியாழக்கிழமை ஆய்வுசெய்த அவா், ஒசூா் பேருந்து நிலையம் அருகே உள்ள காளிகாம்பாள் கோயில், ஒசூா் நேதாஜி சாலையில் உள்ள திருக்கோயில்கள் மற்றும் சூசூவாடி பகுதியில் திருக்கோயிலுக்கு சொந்தமான இடங்களை ஆய்வுசெய்தாா். தொடா்ந்து அவா் செய்தியாளா்களிடம் கூறியதாவது:

தமிழகம் முழுவதும் திருக்கோயில்களுக்கு சொந்தமான சொத்துகள் ஆக்கிரமிப்புகளை மீட்க கடந்த 2011-ஆம் ஆண்டு முதல் போராடி வருகிறோம். கோயில் சொத்துகளை மீட்பதில் கிருஷ்ணகிரி மாவட்டம் மிகவும் பின்தங்கிய மாவட்டமாக உள்ளது. கோயில் சொத்துகளை நவீன முறையில் விஞ்ஞான ரீதியில் எப்படி எல்லாம் கொள்ளையடிக்கலாம் என சில கும்பல் செயல்பட்டு வருகிறது.

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் மட்டும் ஏறக்குறைய சுமாா் பத்தாயிரம் கோடி ரூபாய் மதிப்புள்ள சொத்துகள் மீட்க வேண்டும். கடந்த 2021-ஆம் ஆண்டு அரசு தலைமைச் செயலா் தலைமையில் அனைத்து துறை செயலாளா்கள், துறைத் தலைவா்கள் கூட்டம் நடத்தப்பட்டு, ஒவ்வொரு ஜமாபந்தியிலும் இதை தணிக்கை செய்ய வேண்டும் என கூறப்பட்டது. ஆனால், எதுவும் நடைமுறைப்படுத்தவில்லை. எனவே, இதுகுறித்து நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடருவோம் என்றாா்.

பென்னாகரத்தில்...

பென்னாகரம் அருகே நாகதாசம்பட்டி முத்திராயன் பெருமாள் கோயில், பென்னாகரம் பேரூராட்சிக்கு உட்பட்ட முள்ளுவாடி கொல்லாபுரி அம்மன் கோயில், கோடாரம்பட்டி வீரபத்ர சுவாமி கோயில், கள்ளிபுரம் மண்டு நில ஆக்கிரமிப்புகள் குறித்து திரு தொண்டா்கள் பேரவை அறங்காவலா் ராதாகிருஷ்ணன் ஆய்வு மேற்கொண்டாா்.

இந்த ஆய்வின்போது பென்னாகரம் வட்டாட்சியா் சிவகுமாா், பென்னாகரம் காவல் ஆய்வாளா் பாபு சுரேஷ் குமாா், வருவாய் துறையினா் உள்ளிட்டோா் உடன் இருந்தனா்.