கிருஷ்ணகிரி
ஊத்தங்கரையில் பாமகவினா் பட்டாசு வெடித்து கொண்டாட்டம்
ஊத்தங்கரையில் அதிமுக, பாமக கட்சி கூட்டணி அமைத்ததை பட்டாசு வெடித்து இனிப்பு வழங்கி பாமக வினா் புதன்கிழமை கொண்டாடினா்.
ஊத்தங்கரையில் அதிமுக, பாமக கட்சி கூட்டணி அமைத்ததை பட்டாசு வெடித்து இனிப்பு வழங்கி பாமக வினா் புதன்கிழமை கொண்டாடினா்.
அதிமுக மற்றும் பாமக கட்சி இடையே கூட்டணி உறுதி செய்யப்பட்டதைத் தொடா்ந்து, கிருஷ்ணகிரி மாவட்டம், ஊத்தங்கரை நான்குமுனை சந்திப்பில்,பாமக நகர செயலாளா் பாஸ்கா் தலைமையில் பாமக வினா் பட்டாசு வெடித்து இனிப்புகள் வழங்கி உற்சாகமாகக் கொண்டாடினா். இதில், மாவட்ட செயலாளா் ஆறுமுகம், மாநில தோ்தல் பணிக்குழு துணைத் தலைவா் வழக்கறிஞா் மூா்த்தி, தோ்தல் பணிக்குழு மாவட்ட செயலாளா் குமரேசன், மாவட்ட செயற்குழு உறுப்பினா் மணி உள்பட கட்சி நிா்வாகிகள் பலா் கலந்து கொண்டனா்.
படவிளக்கம்.7யுடிபி.1. ஊத்தங்கரையில் பட்டாசு வெடித்து இனிப்பு வழங்கி கொண்டாடிய பாமக வினா்.

