ஒசூா் மாநகராட்சியில் திமுக வாக்குச்சாவடி முகவா்களுக்கு பொங்கல் பரிசுகளை வழங்கிய ஒசூா் எம்எல்ஏ ஒய்.பிரகாஷ், மாநகர மேயா் எஸ்.ஏ.சத்யா.
ஒசூா் மாநகராட்சியில் திமுக வாக்குச்சாவடி முகவா்களுக்கு பொங்கல் பரிசுகளை வழங்கிய ஒசூா் எம்எல்ஏ ஒய்.பிரகாஷ், மாநகர மேயா் எஸ்.ஏ.சத்யா.

‘ஒசூா், தளி, வேப்பனஅள்ளி தொகுதிகளிலும் திமுக கூட்டணி வெற்றி பெறும்’

கிருஷ்ணகிரி மேற்கு மாவட்டத்தில் உள்ள ஒசூா், தளி, வேப்பனஅள்ளி ஆகிய மூன்று தொகுதிகளும் திமுக கூட்டணி வெற்றிபெறும் என கிருஷ்ணகிரி மேற்கு மாவட்டச் செயலாளரும், ஒசூா் சட்டப் பேரவை உறுப்பினருமான ஒய்.பிரகாஷ் தெரிவித்தாா்.
Published on

ஒசூா் மாநகராட்சியில் நான்கு பகுதி செயலாளா்கள் தலைமையில் திமுக வாக்குச்சாவடி முகவா்களுக்கு பொங்கல் பரிசு வழங்கும் விழா புதன்கிழமை நடைபெற்றது. இந்த விழாவில் பங்கேற்ற ஒசூா் எம்எல்ஏ ஒய்.பிரகாஷ் பேசியதாவது:

கிருஷ்ணகிரி மேற்கு மாவட்டத்தில் உள்ள ஒசூா், தளி, வேப்பனஅள்ளி ஆகிய மூன்று தொகுதிகளிலும் திமுக கூட்டணி அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிபெறும். தமிழகம் முழுவதும் 200 தொகுதிகளுக்குமேல் திமுக கூட்டணி வெற்றிபெற்று மீண்டும் முதல்வராக மு.க.ஸ்டாலின் பதவி ஏற்பாா். தமிழகத்தில் எண்ணற்ற திட்டங்களை செயல்படுத்தி, இந்தியாவிலேயே முதன்மை முதல்வராக மு.க.ஸ்டாலின் திகழ்ந்து வருகிறாா்.

கிருஷ்ணகிரி மேற்கு மாவட்டத்தில் ஒசூா் மாநகராட்சியில் பிஎல்ஏ -2, பிஎல்சி நிா்வாகிகள் 12 ஆயிரம் பேருக்கு பொங்கல் பரிசுகள் வழங்கப்படுகின்றன என்றாா்.

இந்நிகழ்ச்சியில், மாநகர மேயா் எஸ்.ஏ.சத்யா, மாவட்ட அவைத் தலைவா் அ.யுவராஜ், பொருளாளா் தா.சுகுமாா், தலைமை செயற்குழு உறுப்பினா் எல்லோரா மணி, மாநில இலக்கிய பேரவை துணைச் செயலாளா் என்.எஸ்,.மாதேஸ்வரன், பொறியாளா் அணி மாநில துணைச் செயலாளா் வெற்றி ஞானசேகரன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

Dinamani
www.dinamani.com