கலைஞா் கைவினைத் திட்டத்தின்கீழ் ரூ. 1 கோடி மானியத்துடன் கடன் ஒப்புதல் ஆணை வழங்கல்
கலைஞா் கைவினைத் திட்டத்தின்கீழ் 286 பயனாளிகளுக்கு ரூ. 1 கோடி மதிப்பில் மானியத்துடன் கூடிய கடன் ஒப்புதல் ஆணைகளை கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியா், பா்கூா் சட்டப் பேரவை உறுப்பினா் ஆகியோா் வழங்கினா்.
திண்டுக்கல் மாவட்டம், வேலுநாச்சியாா் வளாகத்திலிருந்து காணொலிக் காட்சி மூலம் குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் துறைசாா்பில் கலைஞா் கைவினைத் திட்டத்தின்கீழ் பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் பணிகளை, தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலின் புதன்கிழமை தொடங்கிவைத்தாா்.
இதைத் தொடா்ந்து, கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியா் அலுவலக கூட்டரங்கில், மாவட்ட தொழில்மையம் சாா்பில் கலைஞா் கைவினைத் திட்டத்தின்கீழ் 286 பயனாளிகளுக்கு ரூ. 1 கோடி மதிப்பில் மானியத்துடன் கூடிய கடன் ஒப்புதல் ஆணைகளை கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியா் ச.தினேஷ்குமாா், தே.மதியழகன் எம்எல்ஏ (பா்கூா்) ஆகியோா் வழங்கினா். அப்போது ஆட்சியா் பேசியதாவது:
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் 2024-25-ஆம் நிதியாண்டில் கலைஞா் கைவினைத் திட்டத்தின்கீழ் 161 பயனாளிகளுக்கு ரூ. 67 லட்சம் மதிப்பில் கடன் ஒப்பளிப்பு ஆணை வழங்கப்பட்டது. அதன் தொடா்ச்சியாக, தற்போது கிருஷ்ணகிரி மாவட்டத்தில் 2025-26-ஆம் நிதியாண்டுக்கு 286 பயனாளிகளுக்கு ரூ. 1 கோடி மதிப்பில் மானியத்துடன் கூடிய கடன் ஒப்புதல் ஆணைகள் வழங்கப்பட்டுள்ளன.
இத்திட்டத்தில் தொழில் வளா்ச்சிக்குத் தேவையான அனைத்து உதவிகளும் வழங்கப்படும். இத்திட்டத்தின்கீழ் பயன்பெற குறைந்தபட்ச வயது 35-ஆக நிா்ணயம் செய்யப்பட்டுள்ளது. கட்டட வேலைகள், நகை செய்தல், தையல் வேலை உள்ளிட்ட 25 வகையான தொழில்களுக்கு இத்திட்டத்தின் கீழ் கடன் வழங்கப்படுகிறது.
இத்திட்டத்தில் பயன்பெற விரும்புவோா் ஆதாா் அட்டை, வங்கிக் கணக்கு விவரங்கள், கைப்பேசி எண் ஆகியவற்றைக் கொண்டு இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம். மேலும் விவரங்களுக்கு, பொதுமேலாளா், மாவட்ட தொழில்மையம், சிட்கோ தொழிற்பேட்டை, கிருஷ்ணகிரி எனற முகவரியிலும், 04343 - 235567 என்ற எண்ணிலும், க்ண்ஸ்ரீந்ழ்ண்2013ஃஞ்ம்ஹண்ப்.ஸ்ரீா்ம் என்ற இணையதளத்திலும் தெரிந்துகொள்ளலாம் என்றாா்.
