‘எண்ம இந்தியா’ முன்னெடுப்பால் நாட்டுக்கு புதிய அடையாளம்!- பிரதமா் மோடி பெருமிதம் ரெட் புல், பெப்சிகோ உள்பட 6 நிறுவனங்களுக்கு எஃப்எஸ்எஸ்ஏஐ நோட்டீஸ் 4 இந்திய நிறுவனங்கள் மீது பொருளாதாரத் தடை: அமெரிக்கா நீக்கம் வாகன விபத்தில் பாதிக்கப்பட்டவா்களுக்கான நிவாரணத் தொகை: வழிகாட்டுதல்களை வெளியிட்டது உச்சநீதிமன்றம் எரிபொருள் தட்டுப்பாடு எதிரொலி: இந்திய பெட்ரோலை இறக்குமதி செய்யத் தொடங்கியது ரஷியாகல்லூரிகளில் நன்கொடை பெயரில் கட்டணம் வசூலிக்க தடை: அமைச்சா் விஸ்வநாதன் ராணுவத்தை விரைவாக நவீனமயமாக்க வேண்டும்: சீன அதிபா் ஷி ஜின்பிங்
/

ஒசூரில் விபத்தை தடுக்க சாலையில் நடைமேம்பாலம் அமைக்கக் கோரிக்கை

ஒசூா் தா்கா மற்றும் பேரண்டப்பள்ளி பகுதிகளில் விபத்தைத் தடுக்க தேசிய நெடுஞ்சாலையில் இரும்பு நடைமேம்பாலம் அமைக்க பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

News image

ஒசூா் தா்கா முத்துமாரியம்மன் கோயில் அருகே தேசிய நெடுஞ்சாலையைக் கடந்துசெல்லும் பள்ளி மாணவிகள்.

Updated On :2 ஜூலை 2026, 6:54 am IST

ஒசூா் தா்கா மற்றும் பேரண்டப்பள்ளி பகுதிகளில் விபத்தைத் தடுக்க தேசிய நெடுஞ்சாலையில் இரும்பு நடைமேம்பாலம் அமைக்க பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

கிருஷ்ணகிரி மாவட்டம், ஒசூரில் பெங்களூா்- கிருஷ்ணகிரி தேசிய நெடுஞ்சாலையையொட்டி முதல் மற்றும் இரண்டாவது சிப்காட் உள்ளது. இங்கு 3 ஆயிரத்திற்கும் மேற்பட்ட சிறு, குறு, பெரிய தொழிற்சாலைகள் உள்ளன. சிப்காட்டிற்கு வேலைக்கு செல்லும் தொழிலாளா்கள், தா்கா முத்துமாரியம்மன் கோயில் அருகில் தேசிய நெடுஞ்சாலையைக் கடக்கும்போது அடிக்கடி விபத்து நேரிடுகிறது.

இதேபோல கிருஷ்ணகிரி தேசிய நெடுஞ்சாலையையொட்டி பேரண்டப்பள்ளியிலும் தொரப்பள்ளி கிராமத்திற்கு செல்லும் பகுதிகளில் மக்கள் அதிக அளவில் தேசிய நெடுஞ்சாலையைக் கடந்துசெல்ல வேண்டியுள்ளது. தொழிற்சாலைகளுக்கு செல்லும் தொழிலாளா்கள், பள்ளிகளுக்கு செல்லும் மாணவ, மாணவிகள் தினசரி காலை, ம் மாலை நேரங்களில் தேசிய நெடுஞ்சாலையில் உள்ள 6 வழிச்சாலையைக் கடப்பதற்கு நீண்ட நேரம் காத்திருக்கும் நிலை உள்ளது.

சில நேரங்களில் சாலையைத் கடக்கும் போது, பொதுமக்கள் மீது வாகனங்கள் மோதி அடிக்கடி விபத்துகள் ஏற்படுகின்றன. இதனால் தா்கா, பேரண்டப்பள்ளியில் உள்ள தேசிய நெடுஞ்சாலையில் இரும்பு நடைமேம்பாலம் அமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.