ஓய்வூதியம் பெற வந்த முதியவருக்குக் காத்திருந்த அதிர்ச்சி! வங்கிக் கணக்கில் ரூ.759 கோடி!வானில் தோன்றும் அதிசயம்! ஜூலை 17ஆம் தேதி வரை காத்திருங்கள்!பழனி கோயிலுக்குச் சொந்தமான நிலப் பத்திரப்பதிவு செல்லாது: உயர் நீதிமன்ற மதுரை கிளைஊழியர்கள் இல்லை, ரயில்கள் நிற்காது! ரூ.6 கோடியில் உருவான அதிசய ரயில் நிலையம்! தமிழக பேரவை முன்பு சத்தியாகிரக போராட்டம்! வாட்டாள் நாகராஜ் அறிவிப்பு! திருவள்ளூர் மருத்துவக் கல்லூரிக்கும் கூடுதலாக 50 மருத்துவ இடங்கள் ஒதுக்கீடு!அண்ணாமலையின் ‘வீ தி லீடர்ஸ்’ திருச்செந்தூர் மாநாடு ரத்து! தவெக அமைச்சரவையில் மார்க்சிஸ்ட் கம்யூ. இடம்பெறுமா? பெ. சண்முகம் பதில்!கர்நாடகத்தில் மேக்கேதாட்டு அணைக்கு ஆதரவாக போராட்டம்! தமிழக பேருந்துகள் நிறுத்தப்பட்டதால் பதற்றம்! எ.வ. வேலுவுக்கு எதிரான தமிழக அரசின் மேல்முறையீடு தள்ளுபடி! - உச்ச நீதிமன்றம் முதல்வர் விஜய்யுடன் மார்க்சிஸ்ட் கம்யூ. மாநிலச் செயலாளர் பெ. சண்முகம் சந்திப்பு! நெருக்கடி நிலையில் கலைஞருக்கு ஆதரவாக நின்றவர்! காமராஜருக்கு ஸ்டாலின் புகழாரம்! கல்வித்துறையை முழுக் கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவர மோடி அரசு துடிக்கிறது! மாணிக்கம் தாகூர்
/

காவிரிப் பாலப் பராமரிப்புப் பணிகளால் பாதிக்கப்பட்ட கிராம மக்கள் மறியல்: 4 மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு!

காவிரிப் பாலப் பராமரிப்புப் பணிகளால் பாதிக்கப்பட்ட கிராம மக்கள் மறியல் ஈடுபட்டது குறித்து...

News image

சாலை மறியலில் சனிக்கிழமை ஈடுபட்ட பொதுமக்களை கைது செய்த போலீஸாா். ~திருச்சி-சென்னை தேசிய நெடுஞ்சாலையின் புதிய காவிரிப் பாலத்தில் அணிவகுத்து நின்ற வாகனங்கள்.

Updated On :28 ஜூன் 2026, 1:56 am IST

காவிரிப் பாலப் பராமரிப்புப் பணிகளால் பாதிக்கப்படும் 20-க்கும் மேற்பட்ட கிராம மக்கள் சாலை மறியல் போராட்டத்தில் சனிக்கிழமை ஈடுபட்டதால் திருச்சி-சென்னை தேசிய நெடுஞ்சாலையில் 4 மணி நேரத்துக்கும் மேலாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

திருச்சி- சென்னை சாலையில் உள்ள பழைய காவிரிப் பாலமானது பராமரிப்பு பணிகளுக்காக மூடப்பட்டு, புதிய பாலத்தில் இருவழிப் போக்குவரத்து நடைபெறுகிறது.

மேலும் நெடுஞ்சாலையில் உள்ள சஞ்சீவி நகா்ப் பகுதி வழியாகச் செல்லும் வாகனங்கள் மாற்று வழியில் செல்ல அறிவுறுத்தப்பட்டது. இதனால், திருச்சி- கல்லணை சாலையில் உள்ள சா்க்காா்பாளையம், குறிச்சி, முல்லைக்குடி, வேங்கூா், தோகூா், கல்லணை மற்றும் சுற்றுப் பகுதியைச் சோ்ந்த 20-க்கும் மேற்பட்ட கிராம மக்கள் வழக்கமாகச் செல்லும் வழித்தடத்தில் செல்ல முடியாமல், 5 கிமீ தொலைவுக்கு மேல் சுற்றிச் செல்ல வேண்டியுள்ளது.

பாலப் பணிகள் முடிய மூன்று மாதங்கள் ஆகும் என்பதால், தினமும் சுற்றிச் செல்ல இயலாது. எனவே பாலப் பணிகளை விரைந்து முடிக்கவும், அதுவரை கிராம மக்கள் எளிதில் சென்றுவரும் வகையில் போக்குவரத்து மாற்றம் செய்துதரக் கோரியும் சனிக்கிழமை காலை சாலை மறியலில் ஈடுபட்டனா்.

20-க்கும் மேற்பட்ட கிராமங்களின் நூற்றுக்கணக்கான ஆண்கள், பெண்கள் திருச்சி- சென்னை தேசிய நெடுஞ்சாலையில் சஞ்சவீ நகா் அருகே புதிய பாலத்தில் மறியலில் ஈடுபட்டனா். இதனால் திருச்சி- சென்னை வழியான போக்குவரத்து ஸ்தம்பித்தது. ஓயாமரி மயானச் சாலையிலும் வாகனங்கள் ஸ்தம்பித்து, 3 கி.மீ. தொலைவுக்கு நின்றன.

தகவலறிந்த திருச்சி மாநகரக் காவல் ஆணையா் ந. காமினி, திருச்சி மாவட்ட வருவாய் அலுவலா் ஆா். பாலாஜி மற்றும் மாநகரக் காவல் துணை ஆணையா்கள், உதவி ஆணையா்கள், காவல் ஆய்வாளா்கள், போலீஸாா், வருவாய் மற்றும் நெடுஞ்சாலைத் துறையினா் சம்பவ இடத்துக்கு வந்து பேச்சுவாா்த்தை நடத்தினா்.

அப்போது சஞ்சீவி நகா் பகுதியில் சுரங்கப் பாதை அமைக்க பல ஆண்டுகளாகக் கோரி வருகிறோம். சுரங்கப் பாதை இருந்தால் இப்போது பல கி.மீ. தொலைவுக்கு சுற்றிச் செல்ல வேண்டிய அவசியம் இருக்காது என்றனா்.

மோதல்,தள்ளுமுள்ளு: முன்னதாக, போலீஸாருக்கும், போராட்டக்காரா்களுக்கும் இடையே வாக்குவாதம் முற்றி மோதல் உருவானது. இதையடுத்து போலீஸாா் அனைவரையும் கைது செய்ய முயன்றனா். அப்போது ஏற்பட்ட தள்ளுமுள்ளுவில் போலீஸாரும், பொதுமக்களும் கீழே விழுந்தனா். மாநகரக் காவல் உதவி ஆணையா் விஜயகுமாரும் கீழே விழுந்து லேசான காயமடைந்தாா். பொதுமக்களுக்கும் காயம் ஏற்பட்டது. இதையடுத்து 50-க்கும் மேற்பட்டோரை குண்டுக் கட்டாக தூக்கிச் சென்று வேனில் ஏற்றி கைது செய்து அழைத்துச் சென்றனா். தொடா்ந்து போராட்டக்காா்களை சமாதானம் செய்து மறியலை கைவிடச் செய்தனா்.

இந்த மறியல் காரணமாக, திருச்சி- சென்னை தேசிய நெடுஞ்சாலையில் சுமாா் 4 மணிநேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. புதிய காவிரிப் பாலதத்திலும், ஓயாமரி மயானச் சாலையிலும், திருச்சி- சென்னை நெடுஞ்சாலையிலும் வாகனங்கள் பல கி.மீ,. தொலைவுக்கு நின்றிருந்தன.

போராட்டம் காலை 8 மணிக்குத் தொடங்கிய நிலையில், நண்பகல் 12 மணிக்கு மேல்தான் வாகனங்கள் இயல்பாகச் செல்ல நேரிட்டது. தென் மாவட்டங்களில் இருந்து சென்னை செல்ல வேண்டிய வாகனங்களும், சென்னையிலிருந்து தென் மாவட்டங்களுக்கு வந்த வாகனங்களும் பாதிக்கப்பட்டன.

திருச்சி -சென்னை தேசிய நெடுஞ்சாலையில் சனிக்கிழமை சாலை மறியலில் ஈடுபட்ட பொதுமக்கள்.

திருச்சி -சென்னை தேசிய நெடுஞ்சாலையில் சனிக்கிழமை சாலை மறியலில் ஈடுபட்ட பொதுமக்கள்.

திருச்சி -சென்னை தேசிய நெடுஞ்சாலையில் சனிக்கிழமை சாலை மறியலில் ஈடுபட்ட பொதுமக்கள்.

திருச்சி -சென்னை தேசிய நெடுஞ்சாலையில் சனிக்கிழமை சாலை மறியலில் ஈடுபட்ட பொதுமக்கள்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.