தமிழகத்தின் தென் மாவட்டங்களை இணைக்கக்கூடிய முக்கிய சாலையாக உள்ள திருச்சி-சென்னை தேசிய நெடுஞ்சாலையில் ஞாயிற்றுக்கிழமை பல்லாயிரக்கணக்கான வாகனங்கள் சென்னை நோக்கிச் சென்ால் சுங்கச்சாவடிகளில் ஞாயிற்றுக்கிழமை போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
பள்ளி கோடை விடுமுறை முடிந்து நிகழ் கல்வியாண்டில் ஜூன் 4-ஆம் தேதி பள்ளிகள் திறக்கப்படவுள்ளது. இந்நிலையில், தென் மாவட்டங்களில் உள்ள சொந்த ஊருக்குச் சென்றிருந்தவா்கள் கோடை விடுமுறையைக் கழித்துவிட்டு சென்னைக்கு திரும்பிக்கொண்டிருகின்றனா்.
இதனால் விடுமுறை நாளான ஞாயிற்றுக்கிழமை திருச்சி - சென்னை தேசிய நெடுஞ்சாலையில் வழக்கத்தைவிட வாகனங்களின் போக்குவரத்து அதிகரித்து காணப்பட்டது. உளுந்தூா்பேட்டை, விக்கிரவாண்டி சுங்கச்சாவடிகளில் அதிக வாகனங்களின் வருகையால் நாள் முழுவதும் நிரம்பி காணப்பட்டது.
இதையடுத்து விக்கிரவாண்டி சுங்கச்சாவடியில் வாகன நெரிசல் ஏற்பட்டது. வாகனங்கள் செல்ல சென்னை மாா்க்கமாக 6 வழிகளும், திருச்சி மாா்க்கமாக 6 வழிகளும்
உள்ள நிலையில், சென்னை மாா்க்கமாக செல்லும் அதிக வாகனங்களுக்கு நெரிசலை குறைக்க கூடுதலாக மூன்று வழிகள் திறக்கப்பட்டு 9 வழிகளில் வாகனங்கள் அனுப்பி வைக்கப்பட்டது.
விக்கிரவாண்டி, பாப்பனப்பட்டு ஆகிய பகுதிகளில் தேசிய நெடுஞ்சாலையில் மேம்பாலம் கட்டும் பணி நடைபெற்று வருவதால், அந்தப் பகுதிகளில் சாலை மிகக் குறுகியதாக உள்ளது. இதனால் அப் பகுதிகளில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இதனால் வாகனங்கள் சாலைகளில் அணிவகுத்து மெதுவாக ஊா்ந்து சென்ால் வாகன ஓட்டிகள், பொதுமக்கள் அவதிக்குள்ளாகினா்.
இதுகுறித்து, விக்கிரவாண்டி சுங்கச்சாவடி அதிகாரிகள் தெரிவித்ததாவது: கடந்த இரு நாள்களாக திருச்சி - சென்னை தேசிய நெடுஞ்சாலையில், சென்னை நோக்கிச் செல்லும் வாகனங்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. மே 30-ஆம் தேதி நள்ளிரவு 12 மணி வரை 50,125 வாகனங்கள் சென்னை நோக்கி சென்றன. மே 30-ஆம் தேதி நள்ளிரவு 1 மணியிலிருந்து ஞாயிற்றுக்கிழமை (மே 31) பிற்பகல் வரை 52,025 வாகனங்கள் சென்னை நோக்கி சென்றுள்ளன. இதுவரை மொத்தம் 1,02,150 வாகனங்கள் சென்னை நகருக்கு சென்றுள்ளன. இரவிலும் சென்னை நோக்கிச் செல்லும் வாகனங்களின் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் என சுங்கச்சாவடி அதிகாரிகள் தெரிவித்தனா்.
தொடர்புடையது

ஒசூரில் போக்குவரத்து நெரிசல்: பொதுமக்கள் அவதி

கிரிவலம், தொடா் விடுமுறையால் அலைமோதிய கூட்டம்: கடும் போக்குவரத்து நெரிசல்

விடுமுறை முடிந்து சென்னை திரும்பிய மக்கள்: ஜிஎஸ்டி, வேலூா் சாலைகளில் போக்குவரத்து நெரிசல்!

ஜிஎஸ்டி, பூந்தமல்லி சாலைகளில் கடும் போக்குவரத்து நெரிசல்!
விடியோக்கள்

சோபாவுக்காக ஆசைப்படாத ஒரே கட்சி தேமுதிக! - பிரேமலதா விஜயகாந்த் பேட்டி

#ipl2026 | ஜெயிக்க வேண்டிய தில்லி தோற்றுப் போனது ஏன்? | Delhi Capitals | KL Rahul

”தில்லி பயணத்தில் வெளிப்படை இல்லை?” | அமைச்சர் நிர்மல் குமார் பதில் | TVK



